அக்குபஞ்சர் மூலம் இந்த இடங்களில் அழுத்தம் கொடுத்தே உங்கள் தொப்பையை எளிதில் குறைக்கலாம் தெரியுமா?

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Diet fitness அக்குபஞ்சர் மூலம் இந்த இடங்களில் அழுத்தம் கொடுத்தே உங்கள் தொப்பையை எளிதில் குறைக்கலாம் தெரியுமா? Diet Fitness oi-Saran Raj By Saran Raj |

Published: Saturday, March 2, 2019, 15:12 [IST]
உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பழமையான மருத்துவ முறை அக்குபஞ்சர் ஆகும். வெளிப்புற உடல் அழுத்தத்தின் மூலம் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தும் முறைதான் அக்குபஞ்சர் ஆகும். முதுகு வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தலைவலி என பலவற்றையும் அக்குபஞ்சர் மூலம் குணப்படுத்தலாம். பலரும் அறியாத ஒன்று அக்குபஞ்சர் வலியை குறைக்க மட்டுமல்ல எடையை குறைக்கவும் உதவும். சரியான இடத்தில் அளவான நேரம் அழுத்தம் கொடுப்பது உங்களின் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். அக்குபஞ்சர் உங்களுடைய வலிகளை குறைப்பது மட்டுமின்றி உங்களின் ஆன்மீக ஆற்றலையும் உந்துவதாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த இடங்களில் அழுத்துவது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் எடை அதிகரிப்பு இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால் அது எடை அதிகரிப்பு ஆகும். மாறிவரும் வாழ்க்கைமுறை, உணவு பழக்கங்கள், அதிகரித்து போன சோம்பேறித்தனம் என எடை அதிகரிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. எடை சமநிலைதான் உங்கள் ஆரோக்கியத்திற்கான சாவி ஆகும். எடை அதிகரிப்பு ஏற்படும் போது அது உங்களுக்கு பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அக்குபஞ்சர் முன்னரே கூறியது போல அக்குபஞ்சர் பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு மருத்துவ முறையாகும். அக்குபஞ்சர் உங்களுக்கு பல வழிகளில் உதவக்கூடிய ஒரு முறையாகும். இது உங்கள் வலியையும், கொழுப்பையும் மட்டும் குறைக்காமல் இது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. கொழுப்பு எரிப்பு அக்குபஞ்சர் உங்களுக்கு ஒரே இரவில் பலனை அளிக்காது ஆனால் நிச்சயமான பலனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த இடங்களில் அழுத்தம் கொடுப்பது உங்கள் எடை குறைப்பை மட்டும் உண்டாக்காமல் உங்கள் செரிமான மண்டலத்தையும் சீராக செயல்பட வைக்கும். உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும். எடையை குறைக்க எந்தெந்த இடங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம். MOST READ: பெண்கள் இந்த வாஸ்து ரகசியங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.. இல்லையெனில் பிரச்சினைதான்..! காது புள்ளி உங்கள் பசியை கட்டுப்படுத்துவதில் உங்கள் காது முக்கியப்பங்கு வகிப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உங்கள் காதுகளுக்கு நடுவே இருக்கும் அந்த இடத்தில் உங்கள் விரலை வைத்து மென்மையாக மேலும், கீழும் ஆட்டவும். சரியான இடத்தில் கை வைத்தவுடன் ஒரு நிமிடம் அழுத்தவும். இதை தினமும் 5 முறை செய்யவவும். வயிறு உங்கள் வயிற்றின் நடுப்பகுதி அங்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை கொண்டுள்ளது. தொப்பையை குறைக்க பலமணி நேரங்களை ஜிம்மில் செலவழித்தும், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கொண்டும் முயற்சிப்போம். ஆனால் உங்கள் அடிவயிற்றின் நடுப்பகுதியில் மென்மையாக சில நிமிடங்கள் அழுத்தும் கொடுப்பது உங்கள் தொப்பையை மெதுவாக குறைக்க உதவும். இதனை 5 நிமிடங்கள் தொடர்ந்து செய்யவும், தினமும் மூன்று முறை இவ்வாறு செய்வது உங்கள் செரிமானக்கோளாறு, அல்சர், அடிவயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்த உதவும். அடிவயிறு உங்கள் தொப்புளில் இருந்து சரியாக 3 சென்டிமீட்டர் கீழே செல்லவும். இதுதான் உங்கள் செரிமானத்திற்கும், உடல் வலிமைக்கும் முக்கியமான இடமாகும். இரண்டு விரல்களை கொண்டு இந்த இடத்தில் மேலும் கீழுமாக நன்கு மசாஜ் செய்யவும். இரண்டு முறை தினமும் இதனை செய்யவும். முழங்கை உங்கள் முழங்கை உங்களுடைய பெருங்குடலுடன் தொடர்புடையதாகும். இந்த இடத்தில் அழுத்தம் கொடுப்பது உங்கள் குடலில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றவும், உங்களில் உடலில் தேவையில்லாத ஈரப்பதத்தை குறைக்க கூடியதாக இருக்கும். இந்த இடத்தில் கட்டை விரலை கொண்டு 5 நிமிடம் அழுத்துவது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். MOST READ: பெண்களின் முகத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டறியும் ரகசியம் தெரியுமா? முழங்கால் உங்கள் உடலின் மிகவும் முக்கியமான பகுதி இதுதான். உங்கள் உடலின் எடையை தாங்கும் இடமாக இது இருக்கிறது. உங்கள் முட்டியிலிருந்து 2 இன்ச் கீழே காலிற்கு பின்பக்கமாக செல்லவும், இதுதான் சரியான அக்குபஞ்சர் ஆகும். இந்த இடத்தில் உங்கள் கட்டை விரலை கொண்டு ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும். இது உங்களுக்கு விரைவில் நல்ல பலன்களை அளிக்கும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.