அசிங்கமாக சீண்டிய காங்கிரஸ்காரனுக்கு ஆத்திரத்தில் ‘பளார்’ விட்ட ‘குஷ்பு’

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவர் நடிகை குஷ்பூ , அவர் திருச்சி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் வாய்ப்பு கேட்டிருந்தார் ஆனால் தலைமை மறுத்துவிட்டது.
மேலும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சியினரும் அவரை பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை,இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார் குஷ்பூ.
பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வான் அசாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அப்போது பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை , காங்கிரஸ் மட்டும் தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் என்று பேசுகையில் குஷ்பூவின் பின்னால் இருந்த ஒருவர், குஷ்பூவை கைவைத்து சீண்டியுள்ளார்! குஷ்பூ சற்று நேரம் அமைதியாக இருந்தும் அவர் கையை எடுக்காததால் அவர் கன்னத்தில்  பளார் பளார் என அறை விட்டார்.
இந்த திடீர் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. உள்ளூர் டிவி சேனல்கள் இந்தச் சம்பவத்தை அளவில் விவாதித்தன.
குறிப்பாக, குஷ்புவின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் அவரது துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

You bet!!😊😃 https://t.co/TWkK0M0CU5
— KhushbuSundar..#NYAYforINDIA..#CONGRESSforINDIA (@khushsundar) April 11, 2019
நடிகை கஸ்தூரி குஷ்புவுக்கு ஆதரவாக ஒரு டிவிட் போட, அதையும் ரிட்வீட் செய்திருந்தார் குஷ்பு. இந்த வகையில் இன்று டிவிட்டர் ட்ரெண்டில் குஷ்புவின் இந்த டிவீட் இடம்பெற்றுவிட்டது.
ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவரைத் தொடுவது தவறு, இந்த இக்கட்டான சூழலில் குஷ்பு நடந்து கொண்ட விதம் முன்னுதாரணமானது என்று கூறி வருகின்றனர். பலரது டிவிட்களை குஷ்பு தனது பக்கத்தில் ரிட்வீட் செய்து வருகிறார்.

இது குறித்து சமூகத் தளங்களிலும் பெரிதாக விவாதிக்கப் பட்டது. அவற்றில் ஒரு கருத்து…
பெங்களூரில் நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று முழங்கினார்.
பேசி முடித்து கிளம்பிப் போய் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த காங்கீ ஒருவர் தன் கைகளால் குஷ்புவை சில்மிஷம் செய்தார். ஆத்திரமடைந்த குஷ்பூ அந்த காங்கீயை பளார் பளார் என அறைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் நேருயிச காங்கீகள், கூட்டணி ஆட்சியில் இடம் பிடித்துள்ள நிலையில் அகில இந்திய கட்சிப் பொறுப்பில் உள்ள குஷ்பூ மீது தப்பாக நடந்த கொண்ட காங்கீயின் செயல் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதே போல் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் திமுக நடத்திய போராட்டத்தின் போது திமுகவைச் சேர்ந்த ஒரு கிருத்துவப் பெண்மணி மீது இடுப்பைக் கிள்ளி திமுகவினர் ஆபாசமாக நடந்து கொண்டனர். இது தொடர்பாக கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளித்த அந்த கிருத்துவப் பெண் மீது ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ஆபாசமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மண் என்று திமுகவினர் அடிக்கடி தமிழகத்தை சொல்வார்கள். குஷ்பூவிடம் தப்பாக நடந்து கொண்ட காங்கீ சம்பவம் இடம் பெற்ற கர்நாடகம் தான் ராமசாமி நாயக்கரின் பூர்வீகம் என்பது குறிப்பிடத்ததக்கது.

This is called Kapala Moksha in Kannada. @khushsundar slapped a man who tried to misbehave with her while campaigning for Bengaluru Central Candidate. Even few lady reporters who are subjected to this kind of harassment should learn from Kushboo. #LokSabhaElections2019 pic.twitter.com/v5ZuFDTTZa
— Sagay Raj P (@sagayrajp) April 10, 2019

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our ‘Dharma’.

Leave a Reply

Your email address will not be published.