அஜித்துடன் விவேகம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது எதனால்?- சாய் பல்லவி

#Ajith Kumar
#Sai Pallavi

அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது எல்லோரின் ஆசை. ஒவ்வொரு படங்களிலும் புது கலைஞர்களுக்கு அவர் வாய்ப்புகள் கொடுத்து தான் வருகிறார்.சிவா-அஜித்தை வைத்து இயக்கிய படங்களில் மிகவும் ஸ்டைலிஷான ஒரு படம் விவேகம். இந்த படத்திற்காக அஜித் பல கஷ்டங்கள் அனுபவித்தார், அதை மேக்கிங் வீடியோ பார்த்தால் தெரியும். இந்த படத்தில் நாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அக்ஷாரா ஹாசன் இருவரும் நடித்திருந்தனர்.முதலில் இந்த படத்தில் ஒரு வேடத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டால், என்னிடம் கதை கூறி பிறகு வாய்ப்பு கைவிட்டு போனது என்றால் பதில் சொல்லலாம், படக்குழு யாரும் என்னை அணுகவே இல்லை, அது வதந்தி என கூறியுள்ளார்.

Comments are closed.