அடிமையாகும் மாணவர்கள்! பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதித்த குஜராத் அரசு

ஆன்லைன் பப்ஜி விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட் போன் யுகத்தில் பயணித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வரவேற்பு என்பதைக் கடந்து பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என்று செய்திகள் வரத்தொடங்கின.

அதனையடுத்து, பல்வேறு கல்வி நிலையங்களில் பப்ஜி விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தவேண்டும் என்று குஜராத் மாநில அரசு சுற்றறிக்கைவிட்டுள்ளது.

குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையத்தின், பரிந்துரையின் பேரில் பப்ஜி விளையாட்டைத் தடைசெய்யவேண்டும் என்று மாநில தொடக்கக் கல்வித்துறை என்று அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், ’பப்ஜி விளையாட்டுத் தடை செய்யப்பட்டிருப்பதை மாவட்ட தொடக்கக் கல்வித்துறை உறுதிபடுத்தவேண்டும். பப்ஜி விளையாட்டில் குழந்தைகள் அடிமையாகியுள்ளதால், இந்தத் தடை அவசியமாகிறது. இந்த விளையாட்டு மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த குஜராத் குழந்தைகள் நல அமைப்புத் தலைவர் ஜக்ருதி பாண்டியா, ‘பப்ஜி விளையாட்டை நாடு முழுவதும் தடை செய்யவேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையம் பரிந்துரைத்துள்ளது.Loading… எல்லா மாநிலங்களுக்கும் இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளது. எல்லா மாநிலங்களும் இதனைப் பின்பற்றவேண்டும். இந்த விளையாட்டின் எதிர்மறை விளைவுகளைப் பார்த்தப் பிறகு, இந்த விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see: