அதே அஜித் பார்முலாவை பின்பற்றும் STR – ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்

#Simbu
#Sundar.C

செக்க சிவந்த வானம் படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த Attarintiki Daredi படத்தில் தமிழ் ரிமேக் தான் இந்த படம்.தற்போது முழுவீச்சில் ஷூட்டிங் நடந்துவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.அஜித் தன் படங்களுக்கு ‘வி’ என துவங்கும் பெயர் வைப்பது போலவே சிம்புவின் இந்த படத்திற்கும் முதல் எழுத்து ‘வி’ எனவும் தெரிவித்துள்ளனர்.இதனால் தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.