அப்படியே அதே அடக்கம்… அமைதி… மொத்தமா மாறீட்டாரு….எங்கயோ போயிட்டாருப்பா…!

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி, 2-0 என கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து முதல் நான்கு ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அப்படியே அதே ஸ்டைல்:
இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றி கோப்பை வென்று சாதித்தது. இதையடுத்து இந்திய அணியின் இதற்கான கோப்பையை பெற்ற கேப்டன் கோலி, துணைக்கேப்டன் ரோகித் சர்மாவிடம் கொடுத்தார்.

அவர் இளம் கலீல் அஹமதிடம் கோப்பையை கொடுத்தார். தொடரில் கோப்பை வென்றவுடன் அதை அணியின் இளம் வீரரிடம் கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் இந்திய கேப்டன் தோனி துவங்கினார். இதே ஸ்டைலை தற்போது கோலியும் தொடர்கிறார்.

அடுத்த ‘தல’:
இதன் மூலம் இந்திய அணியில் அடுத்த ‘தல’ கிடைத்துவிட்டதாக, கோலி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் கேப்டன் தோனியின் பல்வேறு சாதனைகளை கேப்டனாக கோலி தகர்த்துவிட்டார். தவிர, கேப்டன் பொறுப்பில் தோனி படைக்காத சில சாதனைகளையும் கோலி படைத்துள்ளார். இந்நிலையில் இதுவரை இந்திய அணியின் எந்த கேப்டனும் செய்யாத சாதனையை கோலி எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.