அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்தியர் தேர்வு!!

இந்தியாவிற்காக யு19 உலகக்கோப்பையில் விளையாடிய சவுரப் நெட்ராவல்கர், அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர் சவுரப் நெட்ராவல்கர். அந்தத் தொடரில், அந்தத் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராகவும் திகழ்ந்த இவர், அதன்பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

எஞ்சினியரிங் படித்த இவர், படித்து முடித்தப் பின் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த சவுரப், தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், அமெரிக்க அணியின் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அணியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.