அமேசான் தள்ளுபடி விலையில், புதுபிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் விற்பணை!

அமேசான் இந்தியா சார்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புதுப்பிக்கப்பட்ட சியோமி தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளது. டிசம்பர் 14 ஆம் தேதி வரை இந்த விற்பனை தொடரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகள் 6 மாத கால உத்தரவாதத்தை அமேசான் இந்தியா வழங்குகிறது.மாத தவணை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் செய்தால் 5 சதவிகித சலுகைகளை வழங்குவதாக, ஐசிஐசிஐ வங்கியுடன் அமேசான் இணைந்து அறிவித்துள்ளது. மேலும் இவ்வகை புதுபிக்கப்பட்ட போன்கள் புதிய போன்களைபோலவே இருக்கும் என அமேசான் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமேசான் சான்றளிக்கப்பட்ட எம்.ஐ தயாரிப்பு போன்கள் விற்பனையின் ஒரு பகுதியாக சியோமியின் ரெட்மீ 6 ப்ரோ (3 ஜிபி, 32 ஜிபி) ரேம் மற்றும் நினைவகத்தை கொண்ட இவ்வகை போன்கள் 9,899 ரூபாய்க்கு( ஓரிஜினல் விலை11,499) விற்கப்படுகிறது. புதுபிக்கப்படாத மற்ற புதிய ரெட்மீ 6 ப்ரோ போன்கள் 10,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் அதே வகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட ரெட்மீ 6 ப்ரோ போன்கள் 11,699 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.எம்.ஐ. மெஸ் 2 (4 ஜிபி, 64ஜிபி) இன் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்ட போன் மாடல்கள், அமேசான் நிறுவனம் 10,949 (MRP ரூ 18,999) விற்கப்படுகிறது. மேலும் பல புதுபிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் சியோமியின் வயர்லஸ் ரூட்டர் மற்றும் எம்.ஐ.யின் ஹெ.ஆர்.எஸ். வகைகளும் தள்ளுபடி விலையில் குறைந்தபட்சம் ரூ774லிருந்து – ரூ. 1,299 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.