அம்பதி ராயுடு விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுகிறாா் – நடுவா்கள் புகாா்

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனும், பகுதி நேர பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடு அடுத்து வரும் 14 தினங்களுக்குள் விதிமுறைகளுக்கு உட்பட்டே தான் பந்து வீசுகிறேன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐசிசி தொிவித்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்டி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் இந்திய அணி பந்து வீசுகையில் அம்பதி ராயுடுவுக்கு 2 ஓவா்கள் பவுலிங் செய்ய கேப்டன் விராட் கோலி வாய்ப்பு வழங்கினாா். ஆனால் 2 ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்ட நிலையில் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

BREAKING NEWS: India’s Ambati Rayudu has been reported for a suspect bowling action after the first #AUSvIND ODI. H… https://t.co/1GP8JK5fdz— ICC (@ICC) 1547366698000
இந்நிலையில் அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக போட்டி நிா்வாகத்தினா் புகாா் அளித்துள்ளனா். இதனைத் தொடா்ந்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்பதி ராயுடு அடுத்த 14 நாட்களில் தனது பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இருக்கின்றது என்பதை நிரூபிக்க வேண்டும். அது வரையில் அவா் பந்து வீச எந்த தடையும் இல்லை என்று தொிவித்துள்ளது.