அரசியலுக்கு வருகிறேனா? ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம்

நான் ஒன்றும் அரசியல்வாதியல்ல. நான் தொழில்நுட்பவாதி. ஒரு கல்வியியலாளர் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பதவி வகித்தபோதே, அவருக்கும் மத்திய அரசுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது. பின்னர், பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் ரகுராம் ராஜன் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்.இந்தநிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவார். மத்திய அரசுக்கு எதிரான எதிர்கட்சிகள் கூட்டணியில் ரகுராம் ராஜனும் இணைவார் என்று செய்திகள் வெளிவந்தன.

இந்தநிலையில், ஸ்விட்சர்லாந்தில் நியூஸ் 18- தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘ராகுல் காந்தியிடம் நான் பேசியுள்ளேன். ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியுள்ளேன்.

என்னிடம் யாரெல்லாம் பேச வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களிடம் நான் பேசியுள்ளேன். கடந்த இரண்டு வாரங்களுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசினேன்.

உண்மையில் பொருளாதார ரீதியாக நாட்டை எப்படி முன்னேற்ற முடியும் என்பதை பற்றி மட்டுமே நாம் சிந்திக்கவேண்டும். எந்த புள்ளியில் வளர்ச்சி போதாததாக இருக்கிறதோ, அதை நோக்கி நாம் நகருகிறோம்.

நாம் அதனை சரிசெய்ய வேண்டும். நான் பலமுறை கூறியுள்ளேன். நான் அரசியல்வாதி அல்ல. உங்களுடைய பலம் எது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. நான் ஒரு தொழில்நுட்பவாதி, நான் ஒரு கல்வியலாளர். இந்த இரண்டும்தான் என்னுடைய பகுதி’ என்று தெரிவித்தார்.Loading… Also see: