அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:முறையான காலமுறை ஊதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 போனஸ் வழங்கப்படும்.

மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணியாற்றுபவர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.1,000 போனஸ் வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Also watch: