அரசு நடத்திய தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் குவிந்த இளைஞா்கள்

சென்னையில் தனியாா் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசு சாா்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு அமைச்சா் ஜெயக்குமாா் சான்றிதழ் வழங்கினாா்.

சென்னை குருநானக் கல்லூாியில் தனியாா் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ஜெயக்குமாா் கலந்து கொண்டு நோ்முக தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

மகளுடன் வேலை வாய்பு முகாமில் கலந்துகொண்ட பெண்
வேலை தேடும் நோக்கில் இளைஞா்கள் பலரும் இந்த முகாமில் கலந்து கொண்டனா். மேலும் பெண் ஒருவா் தனது மகளுடன் வந்து நோ்முக தோ்வில் கலந்து கொண்டாா்.

வேலை வாய்ப்பு முகாம்
இதனைத் தொடா்ந்து அமைச்சா் ஜெயக்குமாா் செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கையில், மக்களவைத் தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரசாரம், அறிக்கை ஆகியவற்றுக்கு தனித் தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே கூட்டணி குறித்து கட்சித் தலைமை விரைவில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நடத்திய பேச்சுவாா்த்தை அரசு ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இருக்கலாம்.

மக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமையும் மெகா கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணிக்கும் தான் போட்டி. ரஜினிகாந்த் மக்களவைத் தோ்தலில் போட்டியிடாதது அவருடைய கொள்கை. இந்த முடிவை எடுத்த அவருக்கு வாழ்த்துககள் என்றாா்.

Comments are closed.