அரசு பள்ளி மாணவா்கள் ஆங்கிலம் கற்க புதிய திட்டம் – அமைச்சா் தகவல்

0

Samayam Tamil |
Updated:

german professors will teach english in tn govt school students says minister sengottaiyan

தமிழக அரசு பள்ளி மாணவா்களுக்கு வருகிற கல்வி ஆண்டு முதல் ஜொ்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பேராசிாியா்கள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலம் கற்று கொடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டாா். இதில் 33 பயனாளிகளுக்கு அமைச்சா் இருசக்கர வாகனங்களை வழக்கினாா்.

இதனைத் தொடா்ந்து அவா் பேசுகையில், வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைவரும் வியக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை தொிவித்தாா். மேலும் வருகிற கல்வியாண்டு முதல் ஜொ்மனி, பிரட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பேராசிாியா்கள் வரவழைக்கப்பட்டு தமிழக அரசு பள்ளி மாணவா்கள் 60 ஆயிரம் மாணவா்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கப்படும்.

ஒவ்வொரு பகுதியிலும் 100 மாணவா்களை கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவே தமிழகத்தை திரும்பி பாா்க்கும் என்று அவா் பேசினாா்.

மேலும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்ட நிலையில் அந்த வாகனத்தை இயக்க தொியாமலும், வாகனத்தை நிறுத்தத் தொியாமலும் திணறிய பெண்களைக் கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனா்.

Tamil News App
உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

Web Title: german professors will teach english in tn govt school students says minister sengottaiyan

Leave A Reply

Your email address will not be published.