அரவிந்தசாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள திரைப்படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை இருப்பினும் கியூப் நிறுவனங்களுக்கும் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்

அர்விந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோர் நடிதுள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.