அர்னால்ட்டிற்கு அடுத்ததாக 2.0வின் வில்லன் கதாபாத்திரம் இந்த தமிழ் நடிகருக்கு தான் வந்ததாம்! ஆனால்…

#Rajinikanth
#2.0 (Enthiran 2)
#Kamal Haasan
#Shankar

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.0. ரூ. 500 கோடி செலவில் பிரமாண்டமாக லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை தான் நடிக்க வைக்க இருந்தனர்.ஆனால் அவர் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்க வேண்டும், சண்டைக்காட்சிகள் எல்லாம் அதிநவீன தரத்தில் இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை போட்டதால் தயாரிப்பு நிறுவனம் அவரை கழற்றிவிட்டது.ஆனால் இதற்கடுத்ததாக ஷங்கர் நேராக அக்சய் குமாரை பரிந்துரைக்கவில்லையாம். அர்னால்டிற்கு பிறகு நமது ஆண்டவர் கமல்ஹாசனை தான் வில்லனாக நடிக்க வைக்க முற்பட்டாராம். ஆனால் கமல் தான் நான் தனியாகவே நடிக்கிறேன், ஆதலால் இந்தியன்-2 அல்லது வேறொரு கதையை எடுத்து வாருங்கள் என கூறிவிட்டதாக ஷங்கர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.அதன்பின்பே ஷங்கருக்கு இந்தியன்-2 எடுக்கும் யோசனை வந்ததாம்.