ஆண்களே உங்கள் மீசை மற்றும் தாடி வளரவில்லை என்றால், அது இந்த நோயாக கூட இருக்கலாம்..!

ஆண்கள் என்றாலே அவர்களுக்கு மிகவும் அழகென கருதுவது அவர்களின் முடியைத்தான். பெண்கள் எவ்வாறு தங்கள் முடியின் மீது அதீத பிரியம் கொண்டுள்ளாரோ அதே அளவிற்கு ஆண்களும் தங்களின் முடியின் மீது பிரியம் வைத்துள்ளனர். குறிப்பாக மீசை மாற்றும் தாடி, இவை இரண்டும் ஆண்களின் அடையாளமாகவே கருதப்படுகிறது. தலை முடி சார்ந்த பிரச்சினை பெரும்பாலான ஆண்களுக்கு இருந்தாலும், இந்த மீசை மற்றும் தாடி வளராத பிரச்சினை அதிக ஆண்களை கவலையுற செய்கிறது. ஆண்களின் ஆண்மை சார்ந்த விஷயமாகவே இது பலராலும் இன்றளவும் நம்பப்படுகிறது. மீசை மற்றும் தாடி ஒரு ஆணுக்கு வளரவில்லை என்றால், அது ஏதோ மிக பெரிய குறைபாடாகவே கருதப்படுகிறது. இதற்கு உண்மையான காரணம்தான் என்ன என்று குழம்பி கொண்டிருக்கும் ஆண்களுக்கு பதில்தான் இந்த பதிவு. ஏன் ஒரு ஆணுக்கு மீசை மற்றும் தாடி வளரவில்லை, என்னென்ன காரணிகள் அதற்கு காரணம் என்ற முழு விவரத்தையும் இதில் அறிவோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பருவம் அடைந்தீர்களா..? பெண்கள் பருவம் அடைவது பற்றிய பல தகவல்களை நாம் ஓரளவு அறிந்திருப்போம். ஆனால் ஆண்கள் பருவம் அடைந்தால் எத்தகைய மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பது இன்னும் அறியாமைக்குரிய விஷயமாகவே உள்ளது. பொதுவாக ஆண்கள் பருவம் அடைந்தால் அவர்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும். அவற்றில் ஒன்றுதான், இந்த மீசை மற்றும் தாடி வளர்தல். ஒரு ஆணுக்கு இவை வளரவில்லை என்றால் உடலில் சில வகையான குறைபாடுகள் உள்ளது என்று அர்த்தம். ஹார்மோனே முதன்மையானது..! ஆண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோனாக கருதப்படுவது இந்த டெஸ்டோஸ்டெரான் (Testosterone) தான். ஒரு ஆண் பருவம் அடையும் காலம் முதலே, இது அதிகமாக சுரக்க செய்யும். இந்த ஹார்மோன் சரியாக சுரக்கவில்லை எனில் அது உடல் மற்றும் உளவியல் சார்ந்த வெவ்வேறு பிரச்சினைகளை தரும். இந்த ஹார்மோன்கள் சீராக சுரக்காமல் இருந்தால் மீசை மற்றும் முடியின் வளர்ச்சி நின்றுவிடும். ஹைபோகோணடிசம் (hypogonadism) காரணமோ..! நீங்கள் hypogonadism என்ற குறைபாட்டுடைய நோயினால் பாதிப்படைந்தால் உங்கள் ஆண்மைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும். மீசை மற்றும் தாடியின் முடிகள் வளராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமே. அத்துடன் பொதுவாக ஆண்களின் உடலில் வளரும் முடிகளும் வளராமல் போய்விடும். மன அழுத்தமா..? இன்றைய உலகில் எதற்கெடுத்தாலும் ஆவேசப்படக் கூடிய நிலையில் நாம் வந்து விட்டோம். நம்மை சுற்றி இருக்கும் சமூகத்துக்கு ஏற்றாற்போல் நாமும் நம்மை கடுகடுப்பாகவே மாற்றி கொண்டு வருகின்றோம். இதன் விளைவு உடல் அளவிலும் மன அளவிலும் நாம் மிகவும் மோசமடைகின்றோம். இது மன அழுத்தம் போன்ற கடும் பிரச்சினையை உருவாக்குகிறது. ஆண்களுக்கு மீசை மற்றும் தாடி வளரவில்லை எனில் அதற்கு இதுவும் ஒரு காரணமே..! கைனோகோமஸ்ட்டியா (Gynaecomastia)… ஆண்கள் கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்டிருக்க வேண்டும் என பெரிதும் விரும்புவார்கள். ஆனால், இந்த மார்பக பெரிதாகும் பிரச்சினையால் பலருக்கு நிறைவேறாமலே போய்விடும். இதற்கு காரணம் இந்த Gynaecomastia என்ற நோய்தான். இது ஹார்மோன்களின் பிரச்சினையால் ஏற்பட்டு உடலில் முடி வளர்வதையும் தடுத்து விடும். புகை மீசைக்கும் பகை..! மது அருந்த கூடாது… புகை நாட்டிற்கு பகை..! இப்படிப்பட்ட எத்தனையோ வாசகங்கள் போட்டாலும் நம்மில் பலர் இதை செய்ய தவறுவதில்லை. புகை பழக்கம் எத்தகைய நோய்களை ஏற்படுத்தும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இது மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியையும் தடுக்க கூடியதாம். தூக்கமில்லை… மீசையுமில்லை…! ஆண்கள் அதிக அளவில் இரவு வேளையில் தங்கள் பணிகளை செய்வது நடைமுறையான ஒன்றாகி விட்டது. ஆனால் இரவு, வேலை முடிந்ததும் நன்றாக தூங்குகின்றோமா… என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. நல்ல தூக்கம் இல்லையென்றால் அது கட்டாயம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். ஆண்களுக்கு ஏற்படுகின்ற, இந்த மீசை மற்றும் தாடி முடி பிரச்சினைக்கும் இதுதான் காரணம் என பல ஆராய்ச்சிகளும் சொல்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு… ஒரு மனிதன் தனது வாழ் நாளில் அதிகம் உழைக்க காரணம் நல்ல உணவை உண்ணதான். ஆரோக்கியமாக சாப்பிட்டு நிறைவாக உழைத்தால் எந்தவித உடல் கோளாறுகளும் ஏற்படாது. ஆனால் உழைப்புக்கு ஏற்ற உணவை சாப்பிடாவிட்டால் அது உடலுக்கு ஊறு விளைவிக்கும். இதன் தாக்கம் ஹார்மோனை சீர்கேடு அடைவித்து, மீசை வளராமல் ஆக்கும். தீர்வு என்ன..? உங்களுக்கு மீசை மட்டும் தாடி வளர வேண்டும் என்றால் முதலில் சத்தான உணவுகளை உண்ணுங்கள். மேலும் ஹார்மோன் குறைபாடு இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள். மேலும் சில வகையான இயற்கை மூலிகைகளை பயன்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.