ஆண்ட்ராய்டு வாட்ஸ் ஆப் பயணாளர்களுக்கு பிக்சர் இன் பிக்சர் வசதி அறிமுகம்!

வாட்ஸ் ஆப் தனது ஆண்ட்ராய்டு பயணாளர்களுக்கு பிக்சர் இன் பிக்சர் வசதியை வழங்குகிறது. பேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் ஆப், தனது பயணாளர்களுக்கு புதிய வசதிகளை வழங்குகிறது. இந்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு வெர்சன் 2.18.380 பயன்படுத்துபவர்களுக்கு பிக்சர் இன் பிக்சர் வசதி கிடைக்கிறது. இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஐபோனில் இந்த வசதி வர உள்ளது.பிக்சர் இன் பிக்சர் வசதியை பயன்படுத்துவது எப்படி?பிக்சர் இன் பிக்சர் வசதியை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் வீடியோக்களை சின்ன திரையில் வாட்ஸ் ஆப்பில் சேட் செய்து கொண்டே பயன்படுத்தலாம். இந்த வசதியை குரூப் சேட் செய்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதற்கென தனியாக எதையும் தேர்வு செய்து மாற்ற தேவையில்லை. இது லிங்க் இருந்தால் இந்த வசதியை தானாகவே வழங்கும். இதன் மூலம் சேட் செய்து கொண்டே பிடித்த வீடியாக்களை பார்க்கலாம்.   மேலும், இதில் வீடியோக்களாக வாட்ஸ் வருவதை பிக்சர் இன் பிக்சர் வசதியில் பார்க்க முடியாது. இது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் வீடியோக்களை லிங்க் மூலம் பார்க்கும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்ட்டள்ளது. ஏற்கனவே சொன்னது போல், ஜனவரியில் இருந்து ஐபோனில் இந்த வசதி வர உள்ளது.

One thought on “ஆண்ட்ராய்டு வாட்ஸ் ஆப் பயணாளர்களுக்கு பிக்சர் இன் பிக்சர் வசதி அறிமுகம்!

Leave a Reply

Your email address will not be published.