ஆர்.பி.ஐ. மத்திய குழு கூட்டம் நவ.19-ல் கூடுகிறது

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையில் வரும் 19ம் தேதி மத்திய குழு கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கி வட்டி விகிதம் குறைப்பு, வராக் கடன் அதிகரிப்பு, கடன் வழங்கியதில் முறைகேடு, கடனில் தவிக்கும் வங்கிகளுக்கு ஆர்பிஐ உதவ மறுப்பு என பல்வேறு காரணங்களால் ரிசர்வ் வங்கிக்கும்,  மத்திய அரசுக்கும் உள்ளுக்குள் மோதல் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா, தங்களது செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த சூழலில் ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களில் தலையிடும் விதமாக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கியின் 7-வது சட்டப்பிரிவை, அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கிக்கு நிதித்துறை கடிதம் எழுதியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து விளக்கம் அளித்த நிதித்துறை அமைச்சகம், ஆர்பிஐயின் அதிகாரவரம்பிற்கு உட்பட்டு அதன் தன்னாட்சி அந்தஸ்து காக்கப்படவேண்டிய ஒன்று என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையில், ஆர்.பி.ஐ மத்திய குழுவின் கூட்டம் வரும் 19-ம் தேதி மும்பையில் கூட உள்ளது. இதில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் உட்பட 18 பேர் பங்கேற்க உள்ளனர்.  அக்டோபர் மாத தொடக்கத்தில் மத்திய குழு கூடிய நிலையில், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

Also see…