ஆஸி., வாய்ச்சவடால் இப்போ வேலைக்கு ஆகாது…முடிஞ்சா ஜெயிச்சு பாருங்க: ரவி சாஸ்திரி!

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றனர்.

வெற்றியே இல்லை:
இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி வரும் 21ம் தேதி, பிரிஸ்பேனில் துவங்குகிறது.

வேலைக்கு ஆகாது:
இந்நிலையில், வெற்றி பெற ஆஸ்திரேலிய வீரர்களின் வாய்ப்பேச்சு தற்போது இந்திய அணிக்கு எதிராக வேலைக்கு ஆகாது என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக மனதளவில் காயத்தை ஏற்படுத்தி, சிந்தனையை திசை திருப்புவதில் கில்லாடிகள். ஆனால், என்னைப்பொறுத்தவரை தற்போதைய இந்திய வீரர்களிடம் அது வேலைக்கு ஆகாது. திறமையான மற்றும் நுணுக்கமான கிரிக்கெட் தான் ஆஸி., வீரர்களின் வாய்ப்பேச்சை விட ஜெயிக்கும். அதனால் நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம்.’ என்றார்.