இதை அன்னிக்கே சொல்லியிருந்தா எனக்கு அலைச்சல் மிச்சமாகியிருக்கும்ல்ல..!

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு கண்களாக விளங்க வேண்டும்! என்று, பள்ளி ஆண்டு விழாவில் திருக்குறள் பேரவைச் செயலாளர் கரூர் மேலை பழனியப்பன்.
கருவூர் அழகம்மை மஹாலில் தக்சின் குரூப் ஆப் கல்வி குழுமத்தின் சார்பில் ஆண்டு விழா 4.4.2019 இன்று மாலை நடைபெற்றது! மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பேச்சு, பாட்டு என கலகலப்பாக நடைபெற்றது! தாளாளர் மீனா சுப்பையா வரவேற்றார்
மருத்துவர் திருமதி காந்திமதி மனோகரன் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி ஆரோக்கிய வாழ்வின் அவசியத்தை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்!
திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் பள்ளியின் தாளாளர் திருமதி மீனா சுப்பையாவின் கல்விப் பணியைப் பாராட்டி திருக்குறள் பேரவை சார்பில்” கல்விக் காவலர் “விருது வழங்கி உரையாற்றிய போது தக்சின் குரூப் ஆப் கல்வி நிலையங்களின் சிறப்பான செயல்பாட்டை கற்பித் தலை, திறமைகளை வெளிக்கொணர் தலை பாராட்டினார்
மாணவர்களை நல்ல சிறந்த மாணவர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் பங்கு எத்தகையதோ அதே அளவு பெற்றோருக்கும் உண்டு என்றார்
இருவருமே வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார். நேர நிர்வாகம் ஒழுக்கம், பண்பாடு’ சுற்றுப்புறத் தூய்மை அன்பு அறம் என பன்முகப் பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்றார்.
கல்வியகங்கள் உருவாக்குவதில் வள்ளல் அழகப்பரைப் போல மதன்மோகன் மாளவியா போல பொது நல நோக் கொடு செயல்பட்டால் வரும் காலம் உங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கும் என்றார்! பெற்றோர்கள் ஆசிரியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய மேலை பழநியப்பன் ஆசிரியர்கள் ஆச்சாரியர்களாக திகழ வேண்டும் என்றார் ஆசிரியர் என்பவர் பாடத்தை மட்டும் நடத்துபவர், ஆச்சாரியர் பாடத்தில் உள்ள உயரிய நெறிமுறைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து பாடம் நடத்துபவர்கள் என்றார்.
திருமுருக கிருபானந்த வாரியாரிடம் ஒரு முறை ஒரு அம்மா தன் குழந்தையைக் கூட்டி வந்து இவள் அதிகம் இனிப்புச் சாப்பிடுகிறாள் அதனால் சளிப் பிடிக்கிறது கீரைப் பூச்சி தொந்தரவு ஏனஅடிக்கடி உடல் நலம் பாதிக்கிறது நீங்க சொன்னா கேட்பா அதிகம் இனிப்பு சாப்பிடக்கூடாது என அறிவுரை சொல்லுங்க சாமி என்றார்! சுவாமி சிரித்துக் கொண்டே பதினைந்து நாள் கழித்து காங்கேயநல்லூர் ( சுவாமி ஊர்) கூட்டி வாம்மா சொல்கிறேன் என்றார்.
பதினைந்து நாள் கழித்து அந்த அம்மா குழந்தையை கூட்டிக் கொண்டு காங்கேயநல்லூர் போனார் சுவாமியை சந்தித்து வணங்கி கூட்டி வரச் சொன்னதை நினைவூட்டினார்.
சுவாமி நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு அம்மாவிற்கும் வழங்கி குழந்தைக்கு பூசிவிட்டு பாப்பா இனிமே அதிகம் இனிப்பு சாப்பிடாதே அது உடம்புக்கு கெடுதல் அப்டீன்னு சொல்லி போய் வாருங்கள் என்றார்
அந்த அம்மா சாமியைப் பார்த்து நீங்க ஏதாவது மந்திரிப்பீங்க, பரிகாரம் செய்வீங்கன்னு பார்த்தேன் பொசுக்குன்று சொல்லி போகச் சொல்கிறீர்களே இதை அன்றைக்கே சொல்லியிருந்தால் செலவு அலைச்சல் மிச்சமாகியிருக்குமே என்றாள்
மீண்டும் சுவாமி சிரித்துக் கொண்டே சொன்னார் அம்மா எனக்கு இனிப்புன்னா அலாதிப் பிரியும் நாலு ஐந்து லட்டு சிலேபி சாப்பிடுவேன் அதுனால அன்னைக்கு குழந்தைக்கு இனிப்பு சாப்பிடாதே என்று அறிவுரை சொல்ல எனக்கு யோக்கிதை இல்லை இப்பதினைந்து நாளில் நான் இனிப்பு சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு அறிவுரை சொல்ல தகுதி பெற்றுவிட்டேன் என்றாராம்
இந்நிலையை ஆசிரியர் பெற்றோர் மாணவ மாணவிகளிடம் பின்பற்ற வேண்டும் என்றார் மேலை பழனியப்பன்.

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our ‘Dharma’.

Leave a Reply

Your email address will not be published.