இத பார்த்திருக்கீங்களா? இத சாப்பிட்டீங்கனா இதெல்லாம் உங்க உடம்புல நடக்கும்…

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Herbs இத பார்த்திருக்கீங்களா? இத சாப்பிட்டீங்கனா இதெல்லாம் உங்க உடம்புல நடக்கும்… Herbs lekhaka-Sam asir By Sam Asir |

Published: Monday, May 13, 2019, 15:00 [IST]
பலவித இலை காய்கறிகள் மற்றும் கீரை தொகுப்பில் ‘எண்டைவ்’ என்று ஒரு தாவரம் உள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி தாவரமான இதன் அறிவியல் பெயர் சிகோரியம் எண்டிவியா என்பதாகும். பலர் இதை ‘சிக்கரி’ என்று நினைத்து விடுகிறார்கள். அது தவறு. ஏனைய காய்கறிகளுடன் எண்டைவ் சாலட் தயாரிப்பில் பயன்படுகிறது. அகன்ற உருளை வடிவத்தில் மென்மையான இலைகளுடன் இலைக்கோசு போன்று காணப்படும் இதில் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல சத்துகள் அடங்கியுள்ளன. பெல்ஜியன் எண்டைவ் என்றும் இதனை அழைக்கிறார்கள். கல்லீரலுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது ஆரோக்கியமான உணவு வேண்டும் என்று எண்ணுபவர்கள் தாராளமாக எண்டைவ்வை சாப்பிடலாம். கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருள்களை அகற்றக்கூடிய இயல்பு இதற்கு உள்ளது. சரும நலத்திற்கு மட்டுமின்றி, கருவுறும் பெண்களின் ஆரோக்கியத்தை காக்கும் தன்மையும் இதற்கு உள்ளது. குறைந்த கலோரி உள்ளதால் இதை அநேகர் விரும்பி வாங்குகிறார்கள். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஊட்டச்சத்துகளின் உறைவிடமான எண்டைவ் 100 கிராம் அளவுள்ள எண்டைவ், 17 கலோரி ஆற்றல் அடங்கியது. அதில் 0.2 கிராம் கொழுப்பு, 0.08 மில்லி கிராம் தையமின், 0.075 மில்லி கிராம் ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி2), 0.4 மில்லி கிராம் நியாஸின், 0.9 மில்லி கிராம் பாண்தோதெனிக் அமிலம், 0.44 மில்லி கிராம் வைட்டமின் ஈ, 0.83 மில்லி கிராம் இரும்புச்சத்து, 0.42 மில்லி கிராம் மாங்கனீசு மற்றும் 0.79 மில்லி கிராம் துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் 3.35 கிராம் கார்போஹைடிரேட் என்னும் சர்க்கரைப் பொருள், 3.1 கிராம் நார்ச்சத்து, 1.25 கிராம் புரோட்டீன் என்னும் புரதம், 108 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ இணைப்பொருள், 1300 மைக்ரோகிராம் பீட்டா கரோட்டின், 142 மைக்ரோகிராம் ஃபோலேட், 6.5 மில்லி கிராம் வைட்டமின் சி, 231 மைக்ரோகிராம் வைட்டமின் கே, 52 மில்லி கிராம் கால்சியம், 15 மில்லி கிராம் மெக்னீசியம், 25 மில்லி கிராம் பாஸ்பரஸ், 314 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளன. MOST READ: உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க… ஆரோக்கியமான மகப்பேறு கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு தவிர்க்காமல் எண்டைவ் சாப்பிடலாம். இதில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் அடங்கியிருப்பதால் கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். கருவிலுள்ள குழந்தைக்கு பிறப்பிலேயே வரும் நோய்கள் மற்றும் குறைபாடுகள் உருவாகாமல் காப்பாற்றக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு தங்கள் தினசரி உணவில் எண்டைவ்வை சேர்த்துக் கொள்ளலாம். கூர்மையான கண்கள் கண் பார்வையை கூர்மையாவதற்குத் தேவையான சத்துகள் எண்டைவ்வில் உள்ளன. குளூக்கோமா, கண்புரை. விழித்திரை பாதிப்பு (macular degeneration) போன்ற கண் சம்மந்தமான குறைபாடுகள் முதியோருக்கு ஏற்படாமல் தடுக்கிறது. கண் பார்வையை பாதிக்கக்கூடிய அனைத்து காரணிகளுக்கு எதிராகவும் எண்டைவ் செயல்படும். நல்ல ஜீரணம் எண்டைவ், அதிக நார்ச்சத்தை தன்னகத்தே கொண்டது. ஆகவே வயிறு சம்மந்தமாக வாயு பிரச்னைகளுக்கான சிகிச்சையில் இது பயன்படுத்தப்படுகிறது. மலம் கழியச் செய்யக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் அஜீரண கோளாறு, மலச்சிக்கல் ஆகியவற்றை இது நீக்குகிறது. தொடர்ந்து எண்டைவ் சாப்பிட்டு வந்தால் நன்றாக பசியெடுக்கும். சரியான இரத்த அழுத்தம் உடலில் நைட்டிரியம் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தக்கூடிய பொட்டாசியம் எண்டைவ்வில் இருப்பதால், இரத்த அழுத்தம் சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது. ஹைபர் டென்ஷன் என்னும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் எண்டைவ் சாப்பிட்டு நல்ல பலன் பெறலாம். MOST READ: சனியின் உச்சபட்ச கோபம் இந்த ராசி மேலதான் அதிகம் இருக்குமாம்… அதான் வாட்டி வதைக்குது சுத்தமான கல்லீரல் பித்த நீர், கல்லீரலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றும். நம் உடலில் பித்தநீரை சுரக்கக்கூடிய பித்தப்பையின் செயல்பாட்டை தூண்டக்கூடிய சத்துகள் எண்டைவ்வில் இருப்பதால் இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் கல்லீரல், நச்சுத்தன்மை நீக்கப்பட்டு ஆரோக்கியமாக காக்கப்படும். ஆகவே, கல்லீரல் நன்கு செயல்படுவதற்கு எண்டைவ் உதவி செய்கிறது. பாதுகாப்பான பற்கள் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக காத்துக்கொள்வதற்கு எண்டைவ் சாப்பிட வேண்டும். நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படக்கூடிய தன்மையை எண்டைவ் பெற்றிருக்கிறது. ஆகவே, வாய்ப் புண்கள் ஏற்படாமல் இது தடுக்கிறது. ஆஸ்துமா அகலும் எண்டைவ் ஜூஸ் பருகினால் ஆஸ்துமா வியாதி குணமாகும். இதிலுள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் தீவிர சுவாச கோளாறுகளை சரி செய்யக்கூடியது. அல்சைமருக்கு நோ மனநலத்தை பாதுகாக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்டிஆக்ஸிடெண்டுகள்) மற்றும் தாதுக்கள் எண்டைவ்வில் காணப்படுகின்றன. மூளை செல்களுக்கு இது ஊட்டமளிப்பதால் ஃப்ரீ ராடிகல்ஸ் என்னும் தனியுறுப்பு அயனிகளின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் மற்றும் பாண்தோதெனிக் அமிலம் ஆகியவை மூளையை பாதுகாப்பதால் தீவிர மூளை பாதிப்புகளான அல்சைமர் மற்றும் டிமென்சியா உள்ளிட்ட நோய்கள் வந்திடாமல் பாதுகாக்கிறது. MOST READ: பரம்பரை குண்டா நீங்க? அத எப்படி வேகமா குறைக்கலாம் தெரியுமா? பித்தப்பைக்கு பாதுகாப்பு எண்டைவ்விலுள்ள நொதிகள் என்னும் என்சைம்கள் மற்றும் அமிலங்கள் பித்தப்பையின் செயல்பாட்டை தூண்டுகின்றன. ஆகவே, உடலிலுள்ள நச்சுப்பொருள்கள் அகற்றப்படுகின்றன. இதன் காரணமாக பித்தப்பையில் கல் உருவாவதில்லை. பசியின்மைக்கு பை பை மனநல குறைபாட்டினால் உருவாகும் ஆபத்தான பசியின்மை குறைபாட்டை எண்டைவ் போக்குகிறது. எண்டைவ், நன்கு பசியை தூண்டக்கூடியது. இதில் குறைந்த கலோரியே உள்ளதால், இதை சாப்பிட பின்னரும் பசி தூண்டப்படும். புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு புரோஸ்டேட் சுரப்பி, நுரையீரல் மற்றும் வாய் ஆகியவற்றில் புற்றுநோய் பாதித்திடாமல் காத்திடும் ஆற்றல் எண்டைவ்வுக்கு உண்டு. ஃப்ரீ ராடிகல் என்னும் தனியுறுப்பு அயனி உடலை தாக்கிடாமல் எண்டைவ் பாதுகாத்திடும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், தாதுக்கள் மற்றும் நோய் தடுப்பு ஆற்றல் ஆகியவை உடலுக்கு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன. மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, கொலஸ்ட்ரால் பாதிப்பு ஆகியவை உருவாகாமல் தடுப்பதோடு இருதயத்தை ஆரோக்கியமாக காப்பாற்றுவதோடு, சரும நலனை மேம்படுத்தும் இயல்பும் எண்டைவ்வில் காணப்படுகிறது. எண்டைவ் களைக்கோசு முளை சிட்ரஸ் சாலட் தேவையானவை: எண்டைவ் – 2 எண்ணம் உள்ளி / சாம்பார் வெங்காயம் (சிறியது) – 1 எண்ணம் சிவப்பு பப்ளிமாஸ் – 1 எண்ணம் பெரிய ஆரஞ்சு பழம் – 1 எண்ணம் வாதுமை கொட்டை (அல்மாண்ட்) – ¼ கிண்ணம் (நறுக்கியது) ஃபேட்டா சீஸ் -2 அவுன்ஸ் (1 அவுன்ஸ், ஏறக்குறைய 28 கிராம்) ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு – 1 மேசைக் கரண்டி தேன் – 1 மேசைக் கரண்டி கடல் உப்பு – ¼ தேக்கரண்டி செய்முறை: எண்டைவ் மற்றும் சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பப்ளிமாஸ் மற்றும் ஆரஞ்சு பழங்களின் தோலை வெளிப்புறமிருந்து வெட்டவும். வெளிப்புறமிருந்து மேல்சவ்வினை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். பழத்துண்டுகளை எண்டைவ் துண்டுகள், வாதுமை கொட்டை துணுக்குகள் மற்றும் சீஸ் உடன் சேர்க்கவும். ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் உப்பு ஆகியவற்றை இவற்றுடன் சேர்த்து ஒரு ஜாடிக்குள் போட்டு நன்றாக குலுக்கவும். MOST READ: மனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா? தெரிஞ்ச அதிர்ச்சியில செத்திடாதீங்க… எண்டைவ் வதக்கல் தேவையானவை: உப்பு கலக்காத வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி எண்டைவ் – 4 எண்ணம் (பாதியாக வெட்டியது) கடுகு – 1 மேசைக்கரண்டி சிக்கன் சூப் – ½ கப் டிரை ஒயிட் ஒயின் – 3 மேசைக் கரண்டி உப்பு, மிளகு – தேவையான அளவு செய்முறை: வெண்ணெயை பாத்திரத்தில் இட்டு மிதமான சூட்டில் உருக்கவும். எண்டைவ் மற்றும் கடுகினை இதனுடன் சேர்க்கவும். பொன்னிறமாக மாறும் வரை அடுப்பில் விடவும். சிக்கன் சூப் மற்றும் ஒயினை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து எண்டைவ் இளகும் வரைக்கும் மிதமான சூடு செய்யவும். மிளகுப் பொடி மற்றும் உப்பினை தூவி பரிமாறவும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.