இந்த ஒரு காரணத்திற்காக தான் சர்கார் காட்சியை நீக்கினோம் – சன் பிக்சர்ஸ் அதிரடி விளக்கம்

#Sarkar

சர்கார் படத்தில் வரும் ஒரு சில காட்சிகளுக்கு எதிராக அதிமுக கட்சி சார்பில் பெரிய போராட்டம் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நெருப்பில் இலவச பொருட்களை எறியும் காட்சி மற்றும் கோமளவள்ளி என்கிற பெயர் மியூட் செய்யப்பட்டு, மறுதணிக்கை செய்யப்பட்டு படம் இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளது.எதிர்ப்புக்கு விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் பணிந்துவிட்டதாக விமர்சனமும் இதனால் எழுந்தது.இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.”திரைப்படம் காணவரும் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த வித சேதமும் ஏற்பாடாமல் காக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாக கூறப்படும் காட்சிகள் நீக்கப்பட்டன” என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.இதோ..