இந்த காய்ல ஜூஸ் குடிச்சா பாலிவினை நோய்கூட சரியாகிடுமாம்… எங்க கிடைக்கும்?

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Food இந்த காய்ல ஜூஸ் குடிச்சா பாலிவினை நோய்கூட சரியாகிடுமாம்… எங்க கிடைக்கும்? Food lekhaka-Sam asir By Sam Asir |

Published: Monday, May 13, 2019, 12:10 [IST]
முந்திரி மற்றும் மா போன்று வெப்ப மண்டல மரங்களுள் ஒன்று அம்பரலா. இதன் காய் அம்பரலங்காய் என்று அழைக்கப்படுகிறது. அன்னாசி மற்றும் மாம்பழம் இணைந்தது போன்ற சுவை கொண்டது அம்பரலங்காய். இம்மரத்தின் இலைகளும் பட்டையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அம்பரலங்காயையும் சாப்பிடலாம். ஆனால், பழமாக சாப்பிடுவது சுவையாக இருக்கும். இதன் அறிவியல் பெயர் ஸ்பான்டியஸ் டல்சிஸ் ஆகும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நோய் தீர்க்கும் காய்ச்சல், இருமல், கனரியா என்னும் பால்வினை நோய், வயிற்றுப்போக்கு, வாயில் ஏற்படும் அழற்சி போன்றவற்றிற்கு அளிக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் பயன்படுத்தப்படுகிறது. பிரஞ்சு கயானா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் அம்பரலா மரத்தின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சாப்பிடுவதோடு கூட, இதில் ஆக்ஸிஜனேற்றதடுப்பான்களான ஃபிளவனாய்டுகள், சபோனின் மற்றும் டானின்கள் காணப்படுவதால் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் ஆரோக்கிய உணவாக இது கருதப்படுகிறது. இது தரும் பலன்களை பெரும்பாலும் அநேகர் அறியாமல் உள்ளனர். MOST READ: இந்த இலை தெரியுமா? இதுல டீ போட்டு குடிச்சா நடக்கற அற்புதம் தெரியுமா? ஊட்டச்சத்துகள் விவரம் நூறு கிராம் எடையுள்ள அம்பரலங்காயில் 0.27 கிராம் கொழுப்பு, 0.88 கிராம் புரதம், 0.3 மில்லி கிராம் இரும்புச் சத்து இருக்கும். மேலும் 10 கிராம் கார்போடிஹைடிரேடு என்னும் சர்க்கரைப் பொருள், 2.2 கிராம் உண்ணக்கூடிய நார்ப்பொருள், 5.95 கிராம் சர்க்கரை, 80 கிராம் நீர், 3 மில்லி கிராம் சோடியம், 250 மில்லி கிராம் பொட்டாசியம், 67 மில்லி கிராம் பாஸ்பரஸ், 36 மில்லி கிராம் வைட்டமின் சி ஆகியவையும் காணப்படும். ஆரோக்கிய குணங்கள் புண்கள், இரத்தநாள சேதத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவு, தீப்புண், வயிற்றுப்போக்கு, வயிற்றழைச்சல், தொண்டை வலி, வாயில் ஏற்படும் தொற்று, கண்புரை, காயங்கள், இருமல், கண்ணில் ஏற்படும் நோய்தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைக்கு அம்பரலங்காய் பயன்படுகிறது. தெளிவான பார்வை அம்பரலங்காயில் வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. இது கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது. இம்மரத்தின் இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சாறு கண்களில் ஏற்படும் ஒவ்வாமைக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. கட்டுப்படுத்தப்படும் கொலஸ்ட்ரால் அம்பரலங்காயில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால், உடலில் காணப்படும் கொலஸ்ட்ராலை வளர்சிதை மாற்றத்திற்குள்ளாக்கி பித்தநீர் அமிலங்களாக மாற்றுவதில் உதவி புரிகிறது. கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுவதால், இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு சமநிலையில் உள்ளது. ஆகவே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். MOST READ: வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க? சீராகும் செரிமானம் செரிமானத்தை தூண்டக்கூடிய நார்ச்சத்து இப்பழத்தில் காணப்படுவதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. வயிறு எளிதாக கழிகிறது. அஜீரணம் மற்றும் செரிமான கோளாறுகளை அம்பரலங்காய் குணப்படுத்துகிறது. இதன் பழம் நீர்ச்சத்து கொண்டதாக இருப்பதால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவை சரிசெய்கிறது. இம்மரத்தின் பட்டை, வயிற்றழைச்சலுக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. குறையும் உடல் எடை அம்பரலம் பழத்தில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, கலோரி ஆகியவை குறைவாக உள்ளன. ஆனால், நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே, இப்பழம் தேவைக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. உடல் இயக்கத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளோடு அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நீர் இப்பழத்தில் நிறைந்திருப்பதால் இதை உண்டதும் வயிறு நிறைவான உணர்வு ஏற்படுகிறது. ஆகவே, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதை இது தடுக்கிறது. என்றும் இளமை புரதம், லிப்பிடுகளாகிய கொழுப்பு, கார்போஹைடிரேட் மற்றும் டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகிய நியூக்ளிக் அமிலங்களில் மூலக்கூறுகள் சேதமடையாமல் இதிலுள்ள வைட்டமின் சி பாதுகாக்கிறது. நச்சுப்பொருள்கள், மாசு ஆகியவற்றின் பாதிப்பிலிருந்தும் உடல் செல்களை காப்பதால், சரும பாதிப்புகள் நேர்வதில்லை. இளமையான தோற்றம் நீடிக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டை இப்பழத்திலுள்ள வைட்டமின் சி ஊக்குவிக்கிறது. நோய் தடுப்புக்கான உடல் செயல்பாட்டை இது பலப்படுத்துவதால், நோய்கள், இணை காணப்படாத தனி அயனி ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. MOST READ: வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க குணமாகும் இரத்தசோகை அம்பரலங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இரத்தக் குறைபாட்டினால் அவதியுறுவோருக்கு இது அருமருந்தாகும். இரத்த சிவப்பு அணு உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் பி1 மூலம் அம்பரலங்காய் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் உடல் எங்கும் சென்று சேர்வதற்கு இது துணை செய்கிறது. இருமலுக்கு மருந்து அம்பரலங்காயின் முக்கியமான மருத்துவகுணம், இருமலை குணப்படுத்துவதாகும். தொண்டை வலியின்போது, தொண்டைக்கு இதமளிப்பதோடு குரலில் ஏற்படும் பிரச்னைகளையும் இது சரி செய்கிறது. அம்பரலங்காயை பயன்படுத்துவது எப்படி? அம்பரலா ஜூஸ் தேவையானவை: தோல் நீக்கி நறுக்கப்பட்ட அம்பரலங்காய் 5 அல்லது 6 தண்ணீர் 300 முதல் 400 மில்லி சர்க்கரை 2 மேசைக்கரண்டி உலர வைத்த பிளம்ஸ் 2 ஐஸ் கட்டிகள் செய்முறை: நறுக்கப்பட்ட அம்பரலங்காய் துண்டுகளை நீர் மற்றும் சர்க்கரையுடன் கலந்திடவும். ஐஸ் கட்டி மற்றும் உலர வைத்த பிளம்ஸை சேர்த்து கலக்கவும். இப்போது அம்பரலங்காய் ஜூஸ் தயார். MOST READ: உங்க ராசிக்கு எந்த திசையில இருந்து அதிர்ஷ்டம் வரப்போகுதுனு தெரிஞ்சிக்க இத படிங்க… அம்பரலா சாலட் தேவையானவை அம்பரலங்காய் 3 பொறித்த வெங்காயம் புதினா 4, 5 இலைகள் துளசி 2, 3 இலைகள் செய்முறை: அம்பரலங்காயை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் பொறித்த வெங்காயம், புதினா மற்றும் துளசி இலைகளை சேர்க்கவும். அரைமணி நேரம் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து பின்னர் எடுத்து பரிமாறவும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.