இந்த சிவப்பு குடமிளகாயை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? எப்படி சாப்பிடலாம்?

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Wellness இந்த சிவப்பு குடமிளகாயை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? எப்படி சாப்பிடலாம்? Wellness lekhaka-Suganthi rajalingam By Suganthi Rajalingam |

Published: Wednesday, May 15, 2019, 14:20 [IST]
சிவப்பு மிளகாய் பார்ப்பதற்கு அழகாய் இருப்பதோடு சமையலில் இதன் பயன்களும் ஏராளம். இதனால் வரை இதை ஒரு காய் வகை என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் இது ஒரு பழவகை. இதில் இல்லாத ஊட்டச்சத்துகளே இல்லை எனலாம். மிளகாய் பச்சையாக இருக்கும் போது பழுத்து வருவது தான் இது. அதனால் தான் அதன் நிறம் சிவப்பாக இருப்பதோடு அதன் சுவையும் லேசாக இனிப்பு சுவையுடன் இருக்கும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பச்சையாக சாப்பிடுவது இந்த சிவப்பு மிளகாயை அப்படியே சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள், மினரல்கள் என்று எல்லாம் இருப்பதால் தினசரி உணவில் கூட இதை நீங்கள் சேர்த்து கொள்ளலாம். மஞ்சள், ஆரஞ்சு, பச்சை இவற்றில் சிவப்பு மிளகாய் தான் மிகவும் சிறந்தது. MOST READ: இன்னைக்கு அப்படி என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கணுமா? இதோ உங்களுக்காக… ஊட்டச்சத்து அளவுகள் இதில் 31 கலோரிகள் ஆற்றல் மற்றும் 940 மில்லிகிராம் நீர்ச்சத்து உள்ளது. 100 கிராம் சிவப்பு மிளகாயில் 6 கிராம் கார்போஹைட்ரேட் 1 கிராம் புரோட்டீன் 4.2 கிராம் சர்க்கரை சத்து 2.1 கிராம் நார்ச்சத்து 2.1 கிராம் கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் நல நன்மைகள் கண் பார்வையை அதிகரிக்க இந்த சிவப்பு மிளகாயில் அதிகளவு விட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது. எனவே இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத்திலும் கூட உங்கள் பார்வை திறனை அதிகரிக்கும். எனவே இதை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உடல் எடை குறைப்பு உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த சிவப்பு மிளகாயை எடுத்து வரலாம். இது உடம்புக்கு சூடு அளித்து அதன் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடும். எனவே உடனடியாக உடல் எடை கட்டுக்குள் வந்து விடும். MOST READ: கார்பைடு கல் வைத்து பழுக்காத நல்ல மாம்பழங்களை கண்டுபிடித்து வாங்குவது எப்படி? டயாபெட்டீஸை கட்டுப்படுத்த இதிலுள்ள நார்ச்சத்துகள், ஊட்டச்சத்துகள், விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதனால் தேவையில்லாமல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம். கொலஸ்ட்ராலை கட்டுப்பாடு இந்த சிவப்பு மிளகாய் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளான எல். டி. எல் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. எனவே இதய நோயாளிகள் இதை எடுத்து வந்தால் நல்லது. புற்றுநோயை தடுக்க சிவப்பு மிளகாயில் உள்ள சல்பர் பொருள் செல்கள் பிறழ்ச்சி ஆவதை தடுக்கிறது. இதனால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நமது உடலை காக்கிறது. இந்த சிவப்பு மிளகாய் புற்றுநோய் செல்களுக்கு அரணாக செயல்படுகிறது. ஆர்த்ரிட்டீஸ் நோயை கட்டுப்படுத்த சிவப்பு மிளகாயில் உள்ள கரோட்டீனாய்டு ஆர்த்ரிட்டீஸ் நோயால் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை சரி செய்கிறது. எனவே ஆர்த்ரிட்டீஸ் நோய்க்கு இது இயற்கை மருந்தாகும். இதிலுள்ள சல்பர் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. சிவப்பு மிளகாய் ஜூஸ் எடுத்து பயன்படுத்தி வந்தால் சீக்கிரமே மூட்டுவலி சரி ஆகிவிடும் . MOST READ: மெட்ரோவுல போயி இந்த ஆளு பார்த்த வேலய பாருங்க… எங்க இருந்துடா வர்றீங்க… சீரண சக்தியை அதிகரிக்க சிவப்பு மிளகாயில் உள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரிக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் . எனவே மிளகாயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்ற பிரச்சினைகள் சரியாகும். நரம்பு மண்டலத்தை மேம்படுத்த நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் பி6 நரம்பு மண்டல செயல்பாட்டிற்கும், நரம்பு செல்களை புதிப்பிக்கவும் பயன்படுகிறது. பொரித்த சிவப்பு மிளகாய் ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் 1/2 வெங்காயத்தாள் 30 கிராம் வெங்காய தண்டுகள் 2 செலரி தண்டுகள் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி 2 சிவப்பு மிளகாய் 1 தக்காளி 1 டீ ஸ்பூன் வத்தபொடி 60 மில்லி தக்காளி ஜூஸ் 1 லிட்டர் காய்கறி வேகவைத்த தண்ணீர் 3-4 துளசி இலைகள் 1/2 ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தோல் ப்ரஷ் ஆர்கனோ 1 பிரியாணி இலை 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் (நறுக்கியது) பயன்படுத்தும் முறை ஒரு கடாயில் வெங்காய தாள், வெங்காய தண்டு, செலரி இவைகளைப் போட்டு நன்றாக வதக்குங்கள். அதனுடன் சிவப்பு மிளகாய், இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் வரை சமைக்கவும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், சிவப்பு மிளகாய், தக்காளி சாஸ் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும். அதனுடன் காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்த்து காய்கறிகள் மென்மையாகும் வரை 20 நிமிடங்கள் வதக்கவும். இந்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக கலக்குங்கள். அப்பொழுது சூப் நன்றாக மென்மையாகி விடும். அதன் மேல் ஆரஞ்சு பழத் தோல், நறுக்கிய பார்சிலி மற்றும் ஆர்கனோவை தூவுங்கள். இப்பொழுது அதை ஒரு பெளலில் வடிகட்டி அதன் மேல் துளசி இலைகளை தூவுங்கள். பொரித்த சிவப்பு மிளகாய் மற்றும் பிரக்கோலி சாலட் ரெசிபி தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் தைம் ஸ்பிரிங் சிறுதளவு கருப்பு மிளகு சீசன் சால்ட் 1 முழு வெள்ளை வெங்காயம் 2 சிவப்பு மிளகாய் பொரித்தது 1 பெரிய ப்ரக்கோலி பூக்கள் 1 ப்ரக்கோலி தண்டு 2 பூண்டு பற்கள், நறுக்கியது 1 ஸ்பிரிங் வெங்காயம் 4-5 ஆப்ரிகாட் (உலர்ந்தது) பயன்படுத்தும் முறை எல்லா காய்கறிகளையும் சேர்த்து அதனுடன் உப்பு, மிளகு, தைம் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து வதக்குங்கள். சிவப்பு மிளகாயின் தோலை சீவி விட்டு அதை நேர் நேராக வெட்டி கொள்ளுங்கள். விதைகளை நீக்கி விடவும். ப்ரக்கோலி தண்டுகளை துண்டு துண்டுகளாக நறுக்கி பூண்டு பற்களையும் ஆலிவ் ஆயிலில் போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும். வெங்காயத்தை பூண்டு எண்ணெய்யில் போட்டு வதக்கவும். இப்பொழுது எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் பரப்பி அதன்மேல் எல்லா காய்கறிகளையும் வைத்து அலங்கரியுங்கள். MOST READ: இது நெஜமாவே பேயாம்… அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க… பக்க விளைவுகள் சில பேர் வயிற்றுக்கு சிவப்பு மிளகாய் ஒத்துக் கொள்ளாது. வயிற்றில் எரிச்சல் ஏற்படுதல் குமட்டல் வயிற்று போக்கு எரிச்சல் சீரணமின்மை பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.