இந்த டீயை தினமும் குடிச்சீங்கன்னா புற்றுநோய் பற்றிய பயமே வேண்டாம்… அது வரவே வராது…

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Herbs இந்த டீயை தினமும் குடிச்சீங்கன்னா புற்றுநோய் பற்றிய பயமே வேண்டாம்… அது வரவே வராது… Herbs lekhaka-Suganthi rajalingam By Suganthi Rajalingam |

Published: Monday, April 15, 2019, 16:40 [IST]
இந்த காம்ப்ரே மூலிகை பல வருடங்களாக பயன்படுத்தி வரும் மருத்துவ மூலிகை ஆகும். இதன் வேர்களில் உள்ள பைரோலலிசிடின் அல்கலாய்டுகள் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியது என்று கூறுகின்றனர். அப்படி இருந்தும் இதில் நிறைய மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை நிறைய மக்கள் டீ போட்டு குடித்து வருகின்றனர். இதனால் நாங்கள் நிறைய பலன்களும் அடைந்துள்ளோம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்போ இந்த காம்ப்ரே டீயை குடிக்கலாமா? இதனால் நன்மைகள் கிடைக்குமா? வாங்க அதைப் பற்றி தெரிஞ்சுக்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் காம்ப்ரே டீ என்றால் என்ன? காம்ப்ரே தேநீர் சிம்பைட்டம் அஃபிசினேல் அல்லது பொதுவான அவற்றின் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த தேயிலை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் தாயகமாக உள்ளது. மேலும் மேற்கு ஆசியா, வடக்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய போன்ற நாடுகளிலும் இந்த தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. MOST READ: படுபாவி! கணவர் நைட் ஷிப்ட் வேலைக்கு போனதும் பால்காரன் அந்த பொண்ணை இப்படி பண்ணிட்டானே! தோற்றம் இது பார்ப்பதற்கு கருப்பு, டர்னிப் நிற வேர்களுடன் முடிகளுடன் அகன்று காணப்படும். இது மலர்கள் பார்ப்பதற்கு ஊதா நிற சிறிய கரடி பொம்மை மாதிரி காட்சியளிக்கும். வேறு பெயர்கள் இந்த காம்ப்ரே மூலிகை கழுதை காது, கருப்பு வேர், ப்ளாக்வார்ட், ப்ரூரிஸ் வார்ட், சேல்ஸ்வை, சிலிப்பரி ரூட் மற்றும் வால்வார்ட் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பயன்கள் இந்த மூலிகை நீண்ட காலமாக வலிகள், தலைவலி போன்றவற்றிற்கு பயன்பட்டு வருகிறது. இது நிட் போன், என்ற பெயரிலும் பராம்பரிய முறையில் அழைக்கப்படுகிறது. கிரீக்ஸ், ரோமன் போன்ற நாடுகளில் விபத்துகளில் ஏற்படும் காயத்திற்கு கூட இந்த மூலிகையை பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இதை வெளிப்புறமாக எடுத்துக் கொள்வதே நல்லது. காயங்கள் மற்றும் சருமத்தில் இதை தடவி வருகின்றனர். சீக்கிரமே காயங்கள் மற்றும் வலிகள் சரியாகி விடும். MOST READ: சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்… நன்மைகள் காயங்களை ஆற்றுவதற்கு அதிகப்படியான மாதவிலக்கு இரத்த போக்கை சரி செய்ய வயிற்று போக்கு சிறுநீரில் இரத்தம் கசிதல் தழும்புகள் மறைதல் எரிச்சலை குறைத்தல் சுவாச பிரச்சினைக்கு தீர்வளித்தல் நிமோட்டிக் ஆர்த்ரிட்டீஸ் நோய்க்கு தீர்வளித்தல் சரும வடுக்கள் மற்றும் பூச்சி கடித்தலுக்கு தீர்வு எலும்பு முறிவு, வலி மற்றும் எலும்பில் அழுத்தங்களை குறைத்தல் வலி மற்றும் தலைவலிகளை சரி செய்தல் இரத்த ஓட்டத்தை அதிகரித்தல் சருமத்தை மென்மையாக்குதல் பருக்களுக்கு சிகிச்சைகள் புற்றுநோயை தடுத்தல் மெமரேரியல் ஸ்லோன் கெட்ட ரிங் கேன்சர் சென்டர் நடத்திய ஆராய்ச்சி படி பார்த்தால் காம்ப்ரே வேர்கள் மற்றும் இலைகள் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இந்த காம்ப்ரேயில் இரண்டு பொருட்கள் உள்ளன. அலன்டோயின் புற்றுநோய் செல்கள் அதிகமாகுவதை தடுக்கிறது. அதே மாதிரி ரோஸ்மரினிக் அமிலம் அழற்சியை குறைக்கிறது. அதே மாதிரி நுரையீரலில் சிறிய இரத்த குழாய்களில் ஏற்படும் காயத்தை தடுக்கிறது. தெரபியூடிக் ரிசர்ஜ் சென்டர் நேச்சுரல் மெடிசன் ரிப்போர்ட் படி இந்த மூலிகை முதுகு வலி, ஆஸ்ட்ரியோஆர்த்ட்ரிட்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. MSKCC நல வாரியம் கூற்றுப்படி இந்த மூலிகை நிறைய உடல் நல சிகிச்சைகளுக்கு உதவுகிறது. பக்க விளைவுகள் நேச்சுரல் மெடிசன் தகவல் படி இதை 10 நாட்கள் சருமத்தின் மீது தடவி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் இதை வாய் வழியாகஙோ அல்லது வெட்டுக் காயங்கள் உள்ள இடத்திலோ அப்ளே செய்தால் தீவிர விளைவுகள் உண்டாகும். கருவுற்ற பெண்கள், தாய்ப்பாலுட்டும் இந்த மூலிகையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 2001 ல் அமேரிக்க உணவு கட்டுப்பாடு வாரியம் அறிவுரைப்படி காம்ப்ரே மாத்திரைகள் மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடை செய்தது. இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வரும் அதில் உள்ள கெமிக்கலான பைரோலலிசிடின் அல்கலாய்டுகள் பெரும் விளைவை ஏற்படுத்துவதால் அது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பொருள் கல்லீரலுக்கு நச்சை உண்டாக்க கூடியது. இது கல்லீரலை பாதிக்கும் அல்லது கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும். MOST READ: சாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம்? விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? மருத்துவரை ஆலோசித்தல் இந்த காம்ப்ரே மருந்து நிறைய வகைகளில் நமக்கு நன்மைகளைத் தந்தாலும் இதனால் பக்க விளைவுகளும் ஏற்படவே செய்கின்றனர். எனவே இதை நீங்களாகவே எடுத்துக் கொள்வதை தவிர்த்து மருத்துவரை ஆலோசித்து பெறுவது நல்லது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave a Reply

Your email address will not be published.