இன்று மட்டுமில்லை ஒரு வாரத்திற்கு பல காட்சிகள் ஹவுஸ்புல், விநியோகஸ்தர்கள் கொண்டாட்டம்

#Petta
#Viswasam
#Ajith Kumar
#Rajinikanth

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல வசூல் தரும் படங்கள் தொடர்ந்து வரும். அந்த வகையில் கடந்த வருடம் ஜுன் மாதத்திற்கு பிறகு பல படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றியடைந்தது.அதை தொடர்ந்து இந்த வருடம் ஆரம்பத்திலேயே பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.அதிலும் தமிழகத்தில் தற்போது பொங்கல் விடுமுறை தொடங்கியுள்ளது, இதனால், ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ்புல் தானாம்.நீண்ட வருடங்களுக்கு பிறகு இரண்டு படங்கள் போட்டியிட்டும் வசூல் நன்றாக இருப்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.