இன்று முதல் அமலாகிறது ஈரான் மீது அமெரிக்காவின் பொருளதார தடை

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா, ஏற்கெனவே விதித்த பொருளாதார தடையை, 2015-ம் ஆண்டு நீக்கியது. இந்நிலையில் அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் வாக்குறுதி அளித்தபடி நடந்துகொள்ளவில்லை எனக்கூறி, 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் விலகினார். அதனை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா, மீண்டும் பொருளாதார தடையை விதித்தது.இந்த தடை இன்று முதல் முழுவீச்சில் அமலுக்கு வருகிறது. புதிய தடையால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் சீர்குலையும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் ஈரானுக்கு, புதிய பொருளாதார தடை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஈரான் நாடாளுமன்றத்தில் பேசிய சபாநாயகர் அலி லார்ஜானி, சதாம் உசேன் போல டிரம்ப் நடந்து கொள்வதாக விமர்சித்தார். மேலும் பொருளாதாரத் தடையால் தங்களை வீழ்த்த முடியாது என்றும் அவர் கூறினார். டிரம்புக்கு எதிராக அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Also see…