இரவு இத்தனை மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Wellness இரவு இத்தனை மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? Wellness oi-Saran Raj By Saran Raj |

Published: Tuesday, May 14, 2019, 16:30 [IST]
இன்றைய காலகட்டத்தில் தாமதமாக தூங்குவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தை தாண்டி சாப்பிடுவது என்பது எப்பொழுதுமே ஆபத்தான ஒன்றுதான். ஏனெனில் தாமதமாக தூங்குவது சரி, தாமதமாக சாப்பிடுவதும் சரி பல ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும். தாமதமாக தூங்குபவர்களால் நள்ளிரவு சிற்றுண்டிகளை தவிர்க்கவே முடியாது. இதனால் பல செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். தாமதமாக தூங்குவதாலும், தாமதமாக சாப்பிடுவதாலும் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தாமதாமாக உண்ணுவது வேலையில் மூழ்கியதால் தாமதமாக சாப்பிடுவது, டிவி பார்த்து கொண்டே தாமதமாக சாப்பிடுவது, பசியில்லாததால் தாமதமாக சாப்பிடுவது என தாமதமாக சாப்பிட பல காரணங்கள் இருக்கும். ஆரம்பத்தில் இது ஜாலியாக கூட இருக்கும். ஆனால் அதுவே பழக்கமான பிறகுதான் உங்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் உங்களுக்கு புரியும். எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும்? கொஞ்சம் லேட்டாக சாப்பிடுவதால் என்ன நடக்க போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. தாமதமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும். இரவு உணவு சாப்பிட சரியான நேரம் 7 முதல் 8 வரைதான். அதற்கு மேல் நீங்கள் சாப்பிடுவது நிச்சயம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. விளைவுகள் நன்றாக தூங்கி எழுந்த பிறகு கண்ணாடியில் உங்கள் உருவத்தை பாருங்கள். உங்கள் வயிறு வீங்கியது போன்று காட்சியளிப்பதை நீங்களே பார்க்கலாம். இதற்கு காரணம் தாமதமாக உணவு உண்ணும் பழக்கம்தான். இந்த பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அதனை விடுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இரவு தாமதமாக சாப்பிடுவதால் வீக்கம் மட்டுமின்றி எடை அதிகரிப்பு, இன்சோமேனியா, அமில பிரச்சினைகள் போன்றவையும் ஏற்படலாம். MOST READ: ஆஞ்சநேயருக்கு சிவபெருமான் வழங்கிய மகிமை வாய்ந்த வரம் என்ன தெரியுமா? வயிறு வீக்கம் வயிறு வீக்கம் என்பது சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு வீங்கியது போல காட்சியளிப்பதாகும். மருத்துவரீதியாக கூற வேண்டுமென்றால் வயிறு வீக்கம் என்பது வயிறு மற்றும் குடலில் வாயு சேரும் நிலையாகும். இதற்கு காரணம் உங்கள் டயட் சமநிலையின்மைதான். இதனால் செரிமான பாதைகளில் பிரச்சினை ஏற்பட்டு உணவு செரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் உங்கள் வயிற்றில் உண்டாகும் வாயும் உங்களுக்கு பல அசௌகரியங்களை உண்டாக்குகிறது. ஏப்பம் விடுவது உங்களுக்கு ஓரளவு நிம்மதி தரும், ஆனால் முழுமையான தீர்வாக இருக்காது. எப்படி தவிர்ப்பது? தாமதமாக சாப்பிடுவது நிச்சயம் உஙப்கா வயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும் இதனை தவிர்க்கவே முடியாது. ஆனால் இதிலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளது. ஒருவேளை தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியாமல் சாப்பிட்டாலும் வயிறு வீக்கம் ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது என்று மேற்கொண்டு பார்க்கலாம். அதிகம் சாப்பிடக்கூடாது இரவில் தாமதமாக சாப்பிடும்போது வயிறு வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுதான். உங்களின் வளர்ச்சிதை மாற்றம் இரவில் மிகவும் மெதுவாக இருக்கும், உங்கள் உடல் செரிமானத்தை காட்டிலும் ஓய்வெடுப்பதில் அதிக கவனம் செலுத்தும். இந்த நிலையில் நீங்கள் அதிகமாக சாப்பிடும்போது உங்கள் செரிமான பாதை உணவை முழுமையாக செரிக்க உதவாது. இதனால் காலையில் வீக்கம் ஏற்படலாம்.எனவே சிறிய அளவிலான நார்ச்சத்துக்களும், சர்க்கரையும் இல்லாத உணவை எடுத்துகொள்ளுங்கள். சாப்பிட உடனேயே தூங்காதீர்கள் நீங்கள் அமர்ந்திருக்கும்போது அல்லது நிற்கும் போதோதான் உணவு வேகமாக செரிமானம் அடையும். அந்த நேரத்தில் தூங்குவது செரிமானத்தை பாதிக்கும். சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது உங்கள் செரிமானத்தை துரிதப்படுத்தும். நீங்கள் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானடைந்து விட்டால் உங்களுக்கு வீக்கம் ஏற்படாது. MOST READ: கோவிலில் வலதுபுறத்தில் இருந்து சுற்றிவருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா? பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.