உங்களுக்கு இருக்கின்ற நோயை உங்கள் நகங்களே சொல்லி விடுமாம்..! புதுவித ஆராய்ச்சி..!

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் நம்மை பற்றி தெளிவாக சொல்ல கூடும். அது ஒரு சிறு உறுப்பாக இருக்கலாம், அல்லது பெரிய உறுப்பாகவும் இருக்கலாம். அந்த வகையில் நம்மை பற்றி நம் நகங்களும் பேசுகிறது என்றால் எவ்வளவு ஆச்சரியமான விஷயமாகும். நமது நகங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாக உள்ளது. விரல்களில் எந்த வித பாதிப்பும் இல்லாதவாறு நம் நகங்கள் தான் பாதுகாக்கிறது. நகங்கள் ஒரு சிறந்த பாதுகாப்பாளனாக திகழ்கிறது. எப்படி நம் நகங்கள் நம்மை பற்றி சொல்கிறது என்பதை இனி பார்ப்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அழகிய உறுப்பு…! பலர் இந்த நகங்களை பாதுகாப்பதற்காகவே என்னென்னவோ செய்வார்கள். நாம் எந்த நிலையில் இப்போது உள்ளோம் என்பதை இந்த நகங்கள் தெளிவாக சொல்லி விடுகின்றன. நகங்களின் முழு விவரத்தையும் அதற்கான வரலாற்றையும் இனி தெரிந்து கொள்வோம். மங்கிய நிற நகங்கள் பலருக்கு அவர்களின் தோலே பார்ப்பதற்கு மிகவும் வெளிர்ந்தும், மங்கியும் காணப்படும். அதே போன்று தான் நகங்களும் மங்கிய நிறத்தில் இருந்தால், இதற்கென்று தனி அர்த்தம் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்த சோகை, இதய நோய்கள், ஊட்டசத்து குறைபாடு, கல்லீரல் கோளாறு போன்ற மோசமான பிரச்சினை உங்களுக்கு இருக்கலாம். நீல நிற நகங்கள் சிலரின் நகங்கள் பார்ப்பதற்கு நீல நிறமாக இருக்கும். இதனை பார்த்து விட்டு நமது உடலில் விஷம் ஏறி விட்டது என தவறாக புரிந்து கொள்வோம். ஆனால், உண்மை என்னவென்றால் நீல நிறத்தில் நகங்கள் இருந்தால் உங்களின் உடலில் சரியாக ஆக்சிஜென் செல்லவில்லை என்று அர்த்தமாம். எனவே, இவ்வாறு உங்கள் நகங்கள் இருந்தால் இதய நோய்கள், நுரையீரல் பிரச்சினை இருக்க கூடும். கருப்பு கோடு விழுந்த நகங்கள் உங்களின் நகங்களின் மீது கருப்பு நிறத்தில் கோடுகளாக விழுந்திருந்தால் மிகவும் மோசமான நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த நிலை, உங்களுக்கு தோல் புற்றுநோய் இருப்பதை குறிக்கிறது. எனவே, கருப்பு கோடுகள் உங்களின் நகத்தில் ஏற்பட்டால் உடனே மருத்துவரை ஆலோசியுங்கள். MOST READ: வயிறு உப்பி கொண்டே போவதை நம் முன்னோர்களின் முறைப்படி சரி செய்வது எப்படி…? வெள்ளை நகங்கள் உங்களின் நகம் பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தால், அதற்கென்று தனி அர்த்தம் உள்ளது. இப்படி உங்கள் நகங்களும் வெள்ளையாக, பார்ப்பதற்கு கடினமாக இருந்தால் உங்களுக்கு மஞ்சள் காமாலை என்று அர்த்தம். அத்துடன் உங்களின் கல்லீரல் சீராக வேலை செய்யவில்லை எனவும் கூறலாம். மஞ்சள் நிற நகங்கள் பலரின் நகங்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம் அவர்களுக்கு சர்க்கரை நோய், நுரையீரல் கோளாறு, தைராய்டு பிரச்சினை போன்றவை இருப்பதால். மேலும், இந்த மஞ்சள் நிற நகங்கள் பலவித தொற்றுகளினாலும் ஏற்பட்டிருக்க கூடும். வெடிப்பு அல்லது உடைந்த நகங்கள் உங்களுக்கு நகங்கள் அடிக்கடி உடைகிறது என்றால் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இதற்கு தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததே காரணமாக இருக்கும். அத்துடன் தொற்றுகளின் பாதிப்பாகவும் இருக்கும். எனவே, இது போன்று உங்கள் நகங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். வீங்கிய நகங்கள் நகங்கள் வீங்கிய நிலையில் இருந்தால் அதற்கு ஒரு சில முக்கிய காரணிகள் உள்ளது. சீரான ரத்த ஓட்டம் உடலில் இல்லையென்றாலும், ஏதேனும் கிருமிகளாலும் இந்த பிரச்சினை வர கூடும். மேலும், நாளுக்கு நாள் வீங்கி கொண்டே சிவப்பு நிறமாக மாறவும் கூடும். MOST READ: நிர்வாணக் காட்சிகளின் போது நடந்த அபத்தமான நிகழ்வுகள், நடிகைகள் கூறும் அதிர்ச்சி உண்மைகள்! சிவந்த சொறிப்பு போன்ற நகங்கள் உங்களின் நகங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக சிவந்து சொறி ஏற்பட்டது போன்று இருந்தால் நீங்கள் கட்டாயம் அதனை கவனிக்க வேண்டும். நீங்கள் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். மெல்லிய நகங்கள் சிலரின் நகங்கள் மிகவும் மென்மையாக இருக்கும். இதனை நாம் அழகு என நினைத்து கொள்வோம். ஆனால், இதில் ஆபத்தும் உள்ளது. இது போன்று உங்களுக்கு நகங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுடன் இருக்குறீர்கள் என்று அர்த்தம். மேலும், பசியின்மை பிரச்சினை உங்களுக்கு இருக்க கூடும். இந்த பழக்கம் வேண்டாமே..! நம்மில் பலர் எப்போதும் நகங்களை கடித்து கொண்டே இருப்போம். ஏன் நகம் கடிக்கிறீர்கள் என்று கேட்டால், அதிக டென்ஷனாக உள்ளது என்று கூறுவார்கள். இந்த நிலை உங்களுக்கு நீடித்தால் கட்டாயம் பல பிரச்சினைகள் வர கூடும். மேலும், இதனால் தோல் வியாதிகளும் ஏற்படும். மேலும், இது போன்ற புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.