உலகக்கோப்பையில் ‘தல’ தோனிக்கு இடம் இருக்கா? என்ன சொல்கிறது தேர்வுக்குழு?

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டு (2019) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது.

தோனி ஓய்வு:
இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரான தோனியின் மோசமான பேட்டிங் பார்ம், பினிஷிங் திறமை உள்ளிட்ட விஷயங்கள் பெரும் விவாத தளமாகவே மாறியுள்ளது. தவிர, தோனி விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தும் நிலவிவருகிறது. ஆனால் தேர்வுக்குழுவினர் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை உலகக்கோப்பை வரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

சூப்பர் கீப்பர்:
தேர்வுக்குழுவினர் 331 போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பர் என நம்புகின்றனர். தோனியைத்தவிர, ரிஷப் பண்ட் இரண்டாவது விக்கெட் கீப்பராகவும், தினேஷ் கார்த்திக்கும் அணியில் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

X
இவர்களும் உறுதி:
ரோகித் சர்மா, ஷிதர் தவான், கேப்டன் விராட் கோலி, தோனி, ஆகியோருக்கு உலகக்கோப்பை அணியில் உறுதியாக இடம் உள்ளது. நான்காவது இடம் ராயுடுவுக்கு கிடைக்கும்.
ஐந்தாவது இடத்தில் கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே செட்டிலாகி உள்ளனர்.

சுழல் இரட்டையர்கள்:
பவுலர்களைப் பொறுத்தவரையில், சுழற்பந்துவீச்சாளர் இடம் காலியாக உள்ளது.
சைனாமேன் குல்தீப், லெக் ஸ்பின்னர் சகால் ஆகியோர் மத்திய ஓவர்களில் தேர்வுக்குழுவினர்கள் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸ் மற்றும் பார்ம் குறித்து தேர்வுக்குழுவுக்கு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு கிடைக்கும்.

உலகக்கோப்பைக்கான உத்தேச இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ரிஷப் பண்ட்/ தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா/ கலீல் அஹமது, ராகுல்/ மணீஷ் பாண்டே, உமேஷ் யாதவ்,/ முகமது சிராஜ் .