உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகள் – போட்டி அட்டவணை

0
உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடரின் லீக் சுற்றுக்கள் முடிந்துள்ள நிலையில், நாளை (ஜூன் 30) முதல் 16 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் சுற்றுக்கள் தொடங்குகின்றன.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.

மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் லீக் சுற்றுகள் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடந்தன.

இதிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள், 16 அணிகள் விளையாடும் நாக் – அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நாக்-அவுட் சுற்று விபரம்;
ஜூன் 30 : பிரான்ஸ் vs அர்ஜெண்டினா – நேரம் : 7.30

ஜூன் 30 : உருகுவே vs போர்ச்சுக்கல் – நேரம் : 11.30

* ஜூன் 30ம் தேதி நடைப்பெறும் இரு போட்டிகளில் வெல்லும் அணி காலிறுதியில் போட்டியிடும்.

ஜூலை 01 : ஸ்பெயின் vs ரஷ்யா – நேரம் : 7.30

ஜூலை 01 : குரேஷியா vs டென்மார்க் – நேரம் : 11.30

* ஜூலை 01 ம் தேதி நடைப்பெறும் இரு போட்டிகளில் வெல்லும் அணி காலிறுதியில் போட்டியிடும்.

ஜூலை 02 : பிரேசில் vs மெக்ஸிகோ – நேரம் : 7.30

ஜூலை 02 : பெல்ஜியம் vs ஜப்பான் – நேரம் : 11.30

* ஜூலை 02ம் தேதி நடைப்பெறும் இரு போட்டிகளில் வெல்லும் அணி காலிறுதிக்கு போட்டியிடும்.

ஜூலை 03 : ஸ்வீடன் vs சுவிட்சர்லாந்து – நேரம் : 7.30

ஜூலை 03 : கொலம்பியா vs இங்கிலாந்து – நேரம் : 11.30

* ஜூலை 03ம் தேதி நடைப்பெறும் இரு போட்டிகளில் வெல்லும் அணி காலிறுதிக்கு போட்டியிடும்.

Leave A Reply

Your email address will not be published.