ஊதுபத்தியினால் ஏற்படும் பாதிப்புகள்

இந்தியர்களின் கோவில்களிலும், பூஜையறையிலும் முக்கிய இடம் வகிக்கும் ஒருபொருள் ஊதுபத்தி ஆகும். வாசனையை வழங்குவதுடன் இது மனஅமைதியையும் வழங்குவதாக அனைவராலும் நம்பப்படுகிறது. ஊதுபத்தி என்பது இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் உபயோகிக்கும் ஒரு பொருளாக இருக்கிறது. இத்தகைய ஊதுபத்தியால் பல்வேறு ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுகிறதாம். உண்மைதான், ஊதுபத்திகள் வாசனையுடன் ஆரோக்கிய கேடுகளையும் கூடவே கூட்டிவருகிறது. வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவது புற்றுநோய், ஆஸ்துமா, நரம்பு கோளாறுகள், சுவச கோளாறுகள், இதய நோய் என பல நோய்கள் ஏற்பட காரணமாய் அமைகிறது. ஊதுபத்திகள் அதிகம் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் செல்களில் நச்சுத்தன்மை ஊதுபத்திகள் கொளுத்தப்படும்போது அது அதிகளவு காற்று மாசுபாட்டையும், உடலுக்கு கேடுவிளைவிக்க கூடிய இரசாயன பொருட்களையும் வெளியிடுகிறது. இதில் மிகவும் முக்கியமான ஒரு பாதிப்பு என்னவென்றால் செல்களில் அதிகரிக்கும் நச்சுத்தன்மைதான். இது மரபணுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் நன்மைக்கானதாக இருக்காது. சுவாசக்கோளாறு ஊதுபத்தி கொளுத்தப்பட்டிருக்கும் போது பலருக்கு இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். ஏனெனில் ஊதுபத்தியில் சுவாசமண்டலத்தை பாதிக்கும் பல பொருட்கள் உள்ளது. சில ஊதுபத்திகள் சிகரெட் புகை அளவிற்கு நுரையீலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த புகை உங்கள் சுவாசமண்டலத்தை விரிவடைய செய்யும். நுரையீரல் புற்றுநோய் ஊதுபத்தியிலிருந்து வெளிப்படும் புகை உங்கள் நுரையீரலை நேரடியாக பாதிக்கக்கூடியது. இது உங்கள் நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்பட காரணமாய் அமைகிறது. அதிகளவு ஊதுபத்தி புகையை சுவாசிப்பது நுறையீரல் மட்டுமின்றி பொதுவான ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா புகை மற்றும் காற்று மாசுபாடே ஆஸ்துமா ஏற்படுவதற்கான முதன்மையான காரணங்கள் ஆகும். நுரையீரல் செல்களில் ஏற்படும் வீக்கமே நாளடைவில் விரிவடைந்து ஆஸ்துமாவாக மாறுகிறது. எனவே அடிக்கடி ஊதுபத்தி புகையை சுவாசிப்பது ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இருமல் மற்றும் சுவாசப்பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். சரும அழற்சி சுற்றுப்புறத்தால் உங்களுக்கு சருமபாதிப்புகள் ஏற்படும் பிரச்சினை இருந்தால் ஊதுபத்தி புகை அந்த வாய்ப்புகளை அதிகப்படுத்தும். ஊதுபத்தியை கொளுத்தும்போது அதில் உள்ள இரசாயனங்கள் உங்கள் சருமத்துளைகளின் வழியாக உள்ளே செல்கின்றன. உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் உயவுஎண்ணெய்கள் வெளிவருவதை இது தடுப்பதால் சருமம் பாதிப்பிற்கு உள்ளாகும். குழந்தைகளை பாதிக்கும் பொதுவாகவே அடிக்கடி ஊதுபத்தி உபயோகிப்பது சரியான யோசனை அல்ல. எனவே கர்ப்பகாலத்தில் இதனை அதிகம் உபயோகிமால் இருப்பதே நல்லது. கர்ப்பகாலத்தில் ஊதுபத்தி புகையை சுவாசிப்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை நீங்களே ஆபத்தில் சிக்கவைப்பது போன்றதாகவும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு லுக்கேமியா ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நரம்பு கோளாறுகள் வீட்டிற்குள் ஊதுபத்தி கொளுத்துவது அதிகளவு கார்பன் மோனாக்சைடை சுவாசிக்க செய்கிறது. இது உங்கள் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது கவனசிதறலையும், நியாபகமறதியையும் ஏற்படுத்தும். தலைவலி குறைவான அளவு கார்பன் மோனாக்சைடு சுவாசிப்பது கூட தலைவலி, குமட்டல், மயக்கம், அசௌகரியம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஊதுபத்தி புகையில் தியானம் செய்வதை முடிந்தளவு தவிர்க்கவும். இதய பாதிப்பு தொடந்து ஊதுபத்தி புகையை சுவாசிப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் 12 சதவீதம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் 19 சதவீதம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஊதுபத்தி உபயோகத்தை முடிந்தளவு குறைத்துக்கொள்ளுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.