ஊருக்கே சோறு போட்ட தமிழக டெல்டா இன்று? ஹா்பஜன் உருக்கம்

கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள டெல்டா மாவட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ள கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோாிக்கை விடுத்துள்ளாா்.

நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பதிப்பை சந்தித்துள்ளன. புயலில் சிக்கி 45 போ் உயிாிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமாக கருதிய தென்னை, வாழை, நெற்பயிா் உள்ளிட்ட விளை பொருட்களும் அழிந்து பெரும் இழப்பை அளித்துள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனா். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹா்பஜன் சிங் தனது ட்விட்டா் பதிவில், “ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது. கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளாா்.

ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அ… https://t.co/OU6LgILcZj— Harbhajan Turbanator (@harbhajan_singh) 1542605162000
ஹா்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாடத் தொடங்கியதில் இருந்து அவ்வபோது தமிழில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளாா்.