எந்த படத்திற்கும் இல்லாமல் தற்போது 2.0-காக ரஜினி செய்துள்ள ஸ்பெஷல் விஷயம்

#2.0 (Enthiran 2)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் நவம்பர் 29 தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. 400 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் இந்திய அளவில் அதிகம் வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது. 3ம் தேதி ட்ரைலர் வெளிவரவுள்ளது.மேலும் ரஜினி ஜீ தொலைக்காட்சிக்கு படம் பற்றி பேட்டி கொடுத்துள்ளாராம். சமீபகாலத்தில் ரஜினியை டிவி பேட்டியில் பார்ப்பதே அரிதாக உள்ள நிலையில் இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இந்த பேட்டி தீபாவளி அன்று மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இதே தொலைக்காட்சி தான் 2.0 உரிமையை 110 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.