எரிபொருள் மீதான வரி உயர்வால் அதிர்ந்த போராட்டங்கள்… பணிந்தது பிரான்ஸ் அரசு!

பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக வலுத்த போராட்டங்களால் எரிபொருள் மீதான வரி உயர்வை நீக்கியதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டங்கள் வலுவடைந்து வன்முறையாக வெடித்தது. இதையடுத்து நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தும் சூழல் ஏற்பட்டது.ஆலோசனைக் கூட்டங்கள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை எனப் பலவாறு யோசித்த பிரான்ஸ் அரசு தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. எரிபொருள்கள் மீதான வரி உயர்வு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக பிரான்ஸ் பிரதமர் எட்வர்டு ஃப்ளிப் அறிவித்துள்ளார்.

முன்னதாக பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை 1.42 யூரோக்கள் இருந்தது. ஆனால், வரி உயர்வு விதிக்கப்பட்டிருந்தால் விலை 4 யூரோக்கள் ஆக அதிகரித்திருந்திருக்கும். இந்த விலை உயர்வைக் கண்டித்து பிரான்ஸில் கடந்த நவம்பர் 17-ம் தேதி தொடங்கிய போராட்டத்தில் தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்ட காலத்தில் மட்டும் மூன்று பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பார்க்க: மத்திய அரசுக்கு தமிழக மக்கள் ஏன் வரி செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் கேள்வி