எல்லாரையும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிவார்- விஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பிரபல நடிகர்

#Vishal
#R.K.Suresh

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் பல பொறுப்புக்களில் அங்கம் வகித்து வருகின்றார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என காலில் சக்கரம் கட்டி வேலைப்பார்த்து வந்த அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் முடிந்து விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் விஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார், தயாரிப்பாளரும் பில்லா பாண்டி பட கதாநாயகனுமான ஆர்.கே.சுரேஷ். இவர் ஹீரோவாக நடித்துள்ள கொச்சின் ஷாதி அட் சென்னை 03 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ், மலையாளத்தில் ஈகோ இல்லை. அங்கு குடும்பமாக வேலைப் பார்க்கிறார்கள். ஆனால் இங்கு தமிழ் சினிமாவில் அந்த சூழல் இல்லை.நடிகர் சங்க தேர்தலில் விஷால் தவிர்த்து வேறு யார் நின்றாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. விஷாலுக்கு எதிராக போட்டியாளரை நிறுத்துவோம். ஜே.கே.ரித்திஷின் கனவை நிறைவேற்றுவோம். விஷால் எல்லாரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டுவிடுவார் என்றார்.மேலும் கார்த்தி தலைமையில் ஒரு அணி அமைந்தால் அதனை ஏற்போம் எனவும் கூறினார்.