எல்லோருக்கும் தெரிந்த நேர்கொண்ட பார்வை படத்தின் பிரபலம் நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சி!

#Nerkonda Paarvai
#Rangaraj Pandey

தீரன் பட புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் பலருக்கும் தெரிந்த பேச்சாளர், ஊடக ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அவருடைய நேர்காணல் நிகழ்ச்சிகள் டிவியில் எப்படி இருக்கும் என நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே.இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் துருவங்கள் 2 என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இது குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று வெற்றிகரமாக நடந்தேறியது, துருவங்கள்2. அரங்கை அதிரவைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்காக இன்னமும் கடுமையாய் உழைப்பேன். pic.twitter.com/iGAgsrrf7K— Rangaraj Pandey (@RangarajPandeyR) March 17, 2019