எழுதும்போது உங்களுக்கு கை நடுங்குதா? அது ஏன்? எப்படி ஈஸியா சரி பண்ணலாம்னு தெரியுமா?

நீங்கள் எப்பொழுது எழுத ஆரம்பித்தாலும் உங்கள் கைகள் கட்டுப்பாடின்றி போகிறதா? அப்போ உங்களுக்கு எழுதுவதால் ஏற்படும் பிடிப்பு பிரச்சினை உள்ளது. இந்த எழுத்து பிடிப்பு என்பது ஒருவிதமான நரம்பியல் பிரச்சினை என்று கூறுகின்றனர். Image Courtesy இதனால் தான் கைகள் கட்டுப்பாடின்றி இயங்குகிறது. இதனால் நீங்கள் சரியாக எழுத முடியாமல் தவிக்க நேரிடும். இந்த நரம்பியல் பாதிப்பு உங்கள் கைகள், விரல்கள் என்று எல்லா இடங்களிலும் பரவுகிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் கை நடுக்கம் Image Courtesy இந்த தவறான செயலால் நமது மூளையானது தசைகளுக்கு தவறான சிக்னல்களை கொடுத்து விடுகிறது. இதனால் தான் உங்கள் கைகள் ஏதோ ஒரு பக்கமாக திருப்பி கொள்கிறது. இந்த அறிகுறிகள் பொதுவாக கை சம்பந்தமான வேலைகளை செய்யும் போது மட்டும் ஏற்படுகிறது. அதாவது கைகளால் எழுதுதல், விளையாடுதல், தட்டச்சு செய்தல், கம்பியூட்டர் கீ போர்டு டைப்பிங் போன்ற வேலைகளை செய்யும் போது ஏற்படுகிறது. அறிகுறிகள் இந்த எழுத்து பிடிப்பு உங்களில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதன் அறிகுறி கைகளால் செய்யப்படும் வேலைகளை செய்யும் போது வருகிறது. பேனா அல்லது பென்சிலை பிடிக்க சிரமப்படுதல். MOST READ: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும் மணிக்கட்டில் வலி எழுதும் போது விரல்கள் விரிந்து கொண்டு செல்லுதல் மணிக்கட்டு மற்றும் முழங்கைகள் அசாதாரணமாக விளங்குதல் கைகள் மற்றும் விரல்கள் கட்டளைக்கு பதிலளிக்காமல் இருத்தல் ஆர்த்ரிட்டீஸ் வலியை போக்கும் 8 உடற்பயிற்சிகள் விளைவுகள் தொடர்ச்சியான கை அசைவுகள் மூளையில் ஒரு மறுபதிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் தான் வலி ஏற்படுகிறது. இந்த சிக்னல் மூளைக்கும் கைகளுக்கான தொடர்பில் இடையூறை ஏற்படுத்துகிறது. இதன் அறிகுறிகள் சில கை செயல்களை செய்த பிறகே தெரிய வரும். அடிக்கடி தொடர்ச்சியான கை வேலைகள் செய்தல் மற்றும் எழுதும் போது சரியான நிலையில் கைகளை வைத்து எழுதாமல் இருத்தல் போன்றவை எழுத்து பிடிப்புக்கு காரணமாக அமைகிறது. MOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ… ட்ரை பண்ணிப் பாருங்க… கண்டறிதல் உங்களுக்கு எதாவது எழுத்து பிடிப்பின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே ஒரு நரம்பியல் மருத்துவரை சந்தித்து விடுங்கள். அவர் உங்களுக்கு இந்த எழுத்து பிடிப்பு எப்படி ஏற்படுகிறது, தசைகள் இதில் கலந்து கொள்கிறதா போன்ற விஷயங்களை ஆராய்ந்து சொல்வார். சிகிச்சைகள் உடற் சார்ந்த தெரபி எழுத்து பிடிப்பு அறிகுறிகளை குறைக்க மருத்துவர்கள் முதலில் நீங்கள் பேனாவை சரியான நிலையில் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். உங்களுடைய கை மற்றும் தோள்பட்டை. நிலை அல்லது பேனா பிடிக்கும் விதத்தை மாற்ற வேண்டும். போட்டாக்ஸ் ஊசி இந்த போட்டாக்ஸ் ஊசியை பாதிக்கப்பட்ட தசைகளின் மீது செலுத்தி எழுத்து பிடிப்பை தவிர்க்கலாம். MOST READ: ராகி யாரெல்லாம் சாப்பிடலாம்? காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்? திசை திருப்புதல் உங்கள் மன அழுத்தத்தை குறைத்தாலே போதும் இந்த எழுத்து பிடிப்பு பாதிப்பை குறைக்கலாம். மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவை இதற்கு நல்ல பலன் தரும். அதே மாதிரி இதைப் பற்றியே நோயாளிகள் நினைக்காமல் இருக்க திசைதிருப்புதல் பயிற்சி கொடுக்கப்படுகிறது. போட்டாக்ஸ் ஊசி நரம்புகளுக்கு பலனை அளிக்கும். நீங்கள் எழுதும் போது இருக்கும் செளகரியமான நிலை இந்த பாதிப்பை போக்கி விடும். சில நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகிறது. உடற் சார்ந்த தெரபி, மனம் சார்ந்த தெரபி மற்றும் மருந்துகள் மூன்றும் சேர்ந்து இந்த எழுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.