ஐடிஐ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ’எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 400

பதவி: இளநிலை ஆலோசகர் – 190

சம்பளம்: மாதம் ரூ.16,042

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: இளநிலை தொழில்நுட்ப அதிகாரி – 210

சம்பளம்: மாதம் ரூ.19,188

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஐடிஐ, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் ஒரிஜினல் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 6.11.2018 முதல் 10.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.ecil.co.in அல்லது
http://www.ecil.co.in/jobs/ADVT_NO_39_2018.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.