ஒரே உடையை மீண்டும் மீண்டும் உடுத்துகிறேனா? கோபத்தின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி மகள்

#Jhanvi Kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவிவுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.அதன்பின் தற்போது கார்கில் கேர்ள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கலந்துகொண்ட அவரிடம், நீங்கள் உடுத்திய உடையை மீண்டும் உடுத்துவதால் கேலிக்குள்ளாக்கப் படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த ஜான்வி, எனது நடிப்பு பற்றி விமர்சித்தால், அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். ஆனால் நான் அணிந்திருக்கும் உடை பற்றி விமர்சிக்க, இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவுக்கு நான் சினிமாவில் இன்னும் சம்பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.