ஒரே ஓவரில் 43 ரன்கள் குவித்த நியூசி., வீரர்கள்

நியூசிலாந்தில் நடைபெற்று உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுக்கப்பட்டன.

நியூசிலாந்தில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் வடக்கு மாவட்டங்கள் அணி மற்றும் மத்திய மாவட்டங்கள் அணிக ஆகியவை இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இப்போட்டியில் வடக்கு மாவட்டங்கள் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜோ கார்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன் ஆகிய பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்த நிலையில், இன்னிங்சின் 50வது ஓவரை மத்திய மாவட்டங்கள அணியைச் சேர்ந்த 21 வயது இளம் வேகப்பந்துவீச்சாளர் வில்லெம் லூடிக் வீசினார்.

இந்த ஓவரில் 4, 6nb, 6nb, 6, 1, 6, 6, 6 என கார்டரும் ஹாம்ப்டனும் அதிரடியாக விளாசித் தள்ளினர். இதன் மூலம் மொத்தம் 43 ரன்கள் ஒரே ஓவரில் சேர்ந்தன. இதற்கு முன் ஒரே ஓவரில் 39 ரன்கள் குவிக்கப்பட்ட சாதனையை கார்டரும் ஹாம்ப்டனும் முறியடித்தனர். இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.

இதனை சேஸ் செய்த மத்திய மாவட்டங்கள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் மட்டும் எடுத்ததால், வடக்கு மாவட்டங்கள் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.