கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, ட்விட்டரில் பிரதமர் மோடி எழுதியுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:”கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். இத்தருணத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என அவரிடம் உறுதியளித்தேன். தமிழக மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். இந்த புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்”

என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Spoke to the Chief Minister of Tamil Nadu, Thiru Edappadi K. Palaniswami regarding the situation arising due to cyclone conditions in the state. Assured all possible help from the Centre.
I pray for the safety and well-being of the people of Tamil Nadu. @CMOTamilNadu

Loading…

— Narendra Modi (@narendramodi) November 16, 2018

My thoughts are with the families of those who lost their lives due to cyclonic conditions in parts of Tamil Nadu. I pray for the quick recovery of those injured. Officials are working towards providing all possible assistance in the wake of the cyclone.
— Narendra Modi (@narendramodi) November 16, 2018

கஜா புயல் பாதிப்புகள் தொடர்பான செய்திகளை படிக்க, வீடியோக்களை காண, படங்களை பார்க்க கிளிக் செய்க

News18 Tamil App – செய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்