கணவர் முதலமைச்சர் – மனைவி எம்.எல்.ஏ: கர்நாடக சட்டப்பேரவையில் அரிய நிகழ்வு

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமியும், அவரது மனைவி அனிதா குமாரசாமியும் உறுப்பினர்களாக புதிய சாதனை நிகழ்த்த உள்ளனர்.

ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், அனிதா குமாரசாமி, பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட 1,09,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் குமாரசாமி இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதில் ராம்நகர் தொகுதியில் ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இங்கு அவரது மனைவி அனிதாவை களம் கண்டு வெற்றி பெற்றார். அனிதா வெற்றி பெற்றுள்ளதால் கணவர் முதலமைச்சராகவும், மனைவி உறுப்பினராகவும் சட்டமன்றம் செல்கின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நடந்திராத நிகழ்வு இது.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ரெட்டி சகோதரர்கள் இருவர் ஒன்றாக தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். இவர்களை தவிர தந்தையும் மகனுமான கிருஷ்ணப்பா மற்றும் பிரியா கிருஷ்ணாவும், தந்தை மகளான ராமலிங்க ரெட்டியும், சௌமியா ரெட்டியும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

Also see…