கமல்ஹாசனால் ஏற்பட்ட உயிரிழப்பு! மிரட்டல் விட்ட முக்கிய பிரபலம் – அதிரடியாக வெளியிட்ட முழு கடிதம் இதோ

#Kamal Haasan

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தான் முடிவடைந்தது. தற்போது அவர் தன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை முக்கியமாக கவனித்து வருகிறார்.அடிக்கடி மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் சென்று வருகிறார். அதே வேளையில் விரைவில் அவர் சங்கர் இயக்கத்தில் இணையவுள்ளார். இதே கூட்டணியில் 1993 ல் வந்த தேவர் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்படத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் மூலம் மிரட்டல் விட்டுள்ளார். இதில் அவர் அண்மையில் முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசனின் அரசியல் பேட்டி பார்த்தேன்.அரசியலில் அவர் நேர்மையை வலியுறுத்தும் விதம் பிடித்திருக்கிறது. அதை வரவேற்கிறேன். ஆனால் தேவர்மகன் 2 என படத்திற்கு பெயர் வைக்கக்கூடாது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தால் தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இப்படத்தால் வந்த சாதி கலவரத்தில் இந்த சமூகத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளார்கள். இதற்கு நான் நஷ்ட ஈடு கேட்பேன். இனிவரும் படத்திற்கு தேவேந்திரர் மகன் என பெயர் வைக்க வேண்டும். இல்லையேல் அந்த அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள். மேலும் படம் ஓடாது முடங்கிவிடும் என மிரட்டல் விட்டுள்ளார்.