கஷோகி படுகொலை- சர்வதேச விசாரணைக் கமிஷனில் ஐ.நா நிபுணர்!

பத்திரிகையாளர் கஷோகி மரணம் தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவை ஐ.நா-வின் சிறப்பு நிபுணர் தலைமை தாங்க உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் கஷோகி. இந்த மரணத்துக்குத் தகுந்த நீதி வேண்டும் என துருக்கி அரசு போராடி வருகிறது.சவுதி இளவரசர் தான் கஷோகியின் மரணத்துக்குக் காரணம் என குற்றம் சுமத்துகிறது துருக்கி. இதற்கான ஆதாரத்தையும் தயார் செய்வதாகக் கூறியுள்ளது. கஷோகியின் மரணத்துக்கு சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்க உள்ளது.

இதற்காக ஐ.நா சபையின் சிறப்பு நிபுணர் ஆக்னஸ் கேலமர்ட் வருகிற வாரம் துருக்கி பயணமாகிறார். இவருடன் கூடுதலாக மூன்று சிறப்பு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் தற்போதைய சூழலில் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: இன்று இரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. – சி 44 ராக்கெட்!