காங்கிரஸின் திட்டத்தை விமர்சித்த விவகாரம்: நிதி ஆயோக் துணைத்தலைவருக்கு கண்டனம்

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள “நியாய்” திட்டத்தை, நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் விமர்சித்தது தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6,000 ரூபாய் வழங்கும் வகையிலான, “நியாய்” திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.இது குறித்து கருத்து தெரிவித்த நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார், இது சாத்தியமற்ற ஒன்று எனவும், தேர்தலுக்காக காங்கிரஸ் எதை வேண்டுமானாலும் கூறும் எனவும் விமர்சித்திருந்தார். இதனையடுத்து அரசு அமைப்பில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், இதுபோன்று கருத்து தெரிவிப்பது தவறு என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்த ராஜிவ் குமார், தனிப்பட்ட முறையில் தான் ஒரு பொருளாதார அறிஞராக இந்தக் கருத்தை தெரிவித்ததாகக் கூறினார். இந்த நிலையில், ராஜிவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், நியாய் திட்டத்தை விமர்சித்திருப்பது தேர்தல் நடத்தை விதி மீறலாகவே கருதுவதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது அரசு அதிகாரிகள் பாரபட்சமின்றி கருத்துகள் தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்காலத்தில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்றும் ராஜிவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also see… 2009: திமுக – காங்கிரஸ் திகைப்பூட்டும் வெற்றி!
Loading… Also Read…

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

SCHEDULE TIME TABLE: