காமெடி ரன் அவுட்! திக்கு தெரியாமல் விழித்த விண்டீஸ் வீரர்கள்

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு இடையே ஏற்பட்ட குளறுபடியால் காமெடியான ரன் அவுட் அரங்கேறியது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச முடிவுசெய்தது. முதலில் பேட் செய்ய வந்த விண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ராம்டின் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் வந்த ஹெட்மையருக்கும் மற்றொரு தொடக்க வீரர் ஹோப்க்கும் ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் ரன் எடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் வேடிக்கையான ரன்அவுட் அரங்கேறியது. பந்தை அருகிலேயே ஃபைன் லெக்கில் இருந்த ராகுலிடம் அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார் ஹோப். எதிர்த்திசையில் இருந்த ஹெட்மையர் சற்று தயக்கத்துக்குப் பின் ஓடினார்.

ரன் அவுட் ஆகிவிடுவோம் எனத் தெரிந்து உடனே பின்வாங்கிவிட்டார் ஹெட்மையர். ஆனால், அதற்குள் ஹோப் கிட்டத்தட்ட எதிர்ப்பக்கத்துக்கே வந்துவிட்டார்.

The comical run-out. #INDvWI https://t.co/SyGV8PGyKV— Khurram Siddiquee (@iamkhurrum12) 1541340781000 இதற்குள் ராகுல் தன்னிடம் வந்த பந்தைப் பிடித்து தினேஷ் கார்த்திக்கிடம் மோசமாக முறையில் வீசினார். தினேஷ் கார்த்திக் தன் தலைக்கு மிக உயரத்தில் பறந்த பந்தை துள்ளிப் பிடிக்க முயன்றுகோட்டைவிட்டார். ஆனால், சரியான நேரத்தில் பின்னால் தயாராக காத்திருந்த மனிஷ் பாண்டே பந்தைப் பிடித்து ரன் அவுட் செய்தார்.