கார் ஓட்டிசென்ற அஜித் பட நடிகைக்கு நடுரோட்டில் நடத்த கொடுமை – போலீசில் புகார்

#Actor

தல அஜித்தின் சிட்டிசன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை வசுந்தரா தாஸ்.இவர் சென்ற திங்கட்கிழமை பெங்களூரில் காரில் செல்லும்போது ஒரு சிக்னலில் நின்றுள்ளார். அப்போது அருகில் வலதுபக்கம் நின்றிருந்த கேப் டிரைவர் இடப்பக்கம் திரும்ப முயற்சித்துள்ளார்.ஆனால் வசுந்தரா கிறீன் சிக்னல் வந்ததும் நேராக சென்றுள்ளார், அதனால் அந்த கேப் டிரைவர் இடப்பக்கம் திரும்ப முடியவில்லையாம். அதனால் கோபமான அவர் வசுந்தரா காரை பின்தொடர்ந்து வந்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் காரை மறித்து கீழே இறங்கும்படி மிரட்டியுள்ளார்.பயந்துபோன வசுந்தரா அங்கிருந்து வேகமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாராம். தற்போது இது பற்றி போலீசில் புகார் கூறியுள்ளார். மேலும் அந்த கார் நும்பரையும் போலீஸிடம் கொடுத்துள்ளார்.இதுபற்றி போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.