‘கிங்’ கோலிக்கு மட்டுமல்ல… ‘டான்’ ரோகித்தை பார்த்தும் நடுநடுங்கும் ஆஸி.,!

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றனர்.

வெற்றியே இல்லை:
இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி வரும் 21ம் தேதி, பிரிஸ்பேனில் துவங்குகிறது.

தீவிர பயிற்சி:
இந்நிலையில் இத்தொடரில் சாதிக்க, இந்திய அணி வீரர்கள், தீவிர, பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் ஆகியோர் அங்குள்ள ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்ள நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர்.

தனி திட்டம்:
இந்நிலையில் இந்திய தொடரில் கோலிக்கு மட்டுமல்ல, துவக்க வீரர் ரோகித் சர்மாவுக்காகவும் சிறப்பு திட்டம் வைத்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் கூட்லர் நைல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸி., வேகப்பந்துவீச்சாளர் கூல்டர் நைல் கூறுகையில், ‘இந்திய அணியில் கோலி மட்டும் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை. மற்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். குறிப்பாக ரோகித் சர்மா. உலகின் எல்லா பகுதிகளிலும் சிறப்பாக செயல்படக்கூடிய திறமை கொண்டவர். இதற்கு அவரின் சாதனைகளே சாட்சி. அதனால் அவரை விரைவாக வெளியேற்றவும் திட்டம் வைத்துள்ளோம்.’ என்றார்.