கிறிஸ்துமஸ் விற்பனை; நம்.1 எம்.ஐ ஃபேன் சேல்! – எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

சியோமி நிறுவனம் கிறிஸ்துமஸை முன்னிட்டு எம்.ஐ ஃபேன்ஸூக்கு நம்.1 எம்.ஐ ஃபேன் சேலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த விற்பனையானது டிச.19 முதல் டிச.21 வரை நடைபெறுகிறது.இந்த விற்பனையில், ரெட்மி y2, எம்.ஐ A2 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனையானது எம்.ஐ டிவிகளுக்கும் வழங்கப்படுகிறது.மேலும் இந்த தள்ளுபடி விற்பனையில் கூகுள், மொபிக்விக் மற்றும் பேடீம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகிறது.நம்.1 எம்.ஐ ஃபேன் சேலில் ரெட்மி y2, ரூ.8,999 கிடைக்கிறது. இதன் அறிமுக விலையே ரூ.9,999 ஆக இருந்தது. எம்.ஐ A2 போனுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், கடந்த மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ வந்ததை தொடர்ந்து, ரெட்மி நோட் 5 ப்ரோ விலை குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் தள்ளுபடி விலையில் தற்போது கிடைக்கிறது.சியோமி நிறுவனம் பேடீம் நிறுவமனத்துடன் கூட்டு சேர்ந்து ரூ.300 வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகையானது ரெட்மி y2, ரெட்மி நோட் 6 ப்ரோ, எம்.ஐ A2, போகோ எப்1, ரெட்மி 6, ரெட்மி 6A, ரெட்மி ப்ரோ, ரெட்மி நோட் 5 ப்ரோ உள்ளிட்ட மாடல்களுக்கு கிடைக்கிறது.இந்த எம்.ஐ ஃபேன் சேலில் கிறிஸ்துமஸ் சிறப்பு கிஃப்ட் கார்டுகளும் வழங்கப்படுகிறது. மேலும் சியோமி போன்களுக்கு கேஸ்கள் மற்றும் கவர்கள் ரூ.79க்கு கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.